பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருஞானசம்பந்தர்

109

 மகாதேவருடைய இளங்(கிளைப்)பாவை"[1] எனவும், திருப்பாம்புரப்பதிகம் "மாமலையாட்டி” [2] என்றலும், கல் வெட்டு மாமலையாட்டியார்"[3] ' எனவும், திருவலஞ் சுழிப் பதிகத்தில் ஞானசம்பந்தர் "வண்டுவாழ் குழல்மங்கை" [4]4 என்றாராகக் கல்வெட்டு "வண்டுவாழ் குழலி"[5] எனவும் "வண்டுவாழ் குழலிச் சதுர்வேதிமங்கலம்"[6] எனவும் கூறுவனவாயின.

தமிழகத்தில் நல்லிசைப் புலமை வாய்ந்த சான்றோர்களை அவர்களாற் பாடப்பெற்ற பொருள்பற்றியும், அவர்தம் பாட்டுக்களிற் காணப்படும் அரிய சொல்லாட்சி பற்றியும் சிறப்புப் பெயர்தந்து வழங்குவது சங்க காலத்திருந்தே தொன்றுதொட்டு வரும் வழக்கமாகும். மருதம் பொருளாகவும் பாலை பொருளாகவும் பாடிய சான்றோரை மருதம் பாடிய இளங்கடுங்கோ எனவும், பாலைபாடிய பெருங்கடுங்கோ எனவும் சங்கத்தொகை நூல்கள் குறிப்பது நாடறிந்தது. இவ்வாறே "மீனெறி தூண்டிலார்" [7] "தொடித்தலை விழுத்தண்டினார்" [8] என்பன முதலாக வரும் சான்றோர் பெயர்கள் அவர்கள் வழங்கிய சொற்றொடர் அடியாக வந்தனவாகும். இவ்வண்ணமே ஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் பாடிய பாட்டுக்களுள் கிடக்கும் இனிய சொற்றொடர்களை மக்கட்குப் பெயராக வழங்குவது இடைக்காலத்தே தோன்றிய சீரிய வழக்காறாகும். திருஞானசம்பந்தர் "திருநனிபள்ளி"[9] "திருக்கழுமலநகர்த்"[10] திருப்பதிகங்களிலும் "கோளறு திருப்பதிகத்திலும்" [11] "ஆணை நமதே" என்று எடுத்தோதினார்; அதுகண்டு, அவர்க்குப் பிற்போந்த நம்பியாண்டார் நம்பி யென்பார், "முத்திப் பகவன் முதல்வன் திருவடியை, அத்திக்கும் பத்தர் எதிர் ஆணை நமது என்னவலான்" [12] என்று வியந்து கூறிப்-


  1. S, Í, I. Voł.VII. No, 452.
  2. ஞானசம்41:3
  3. A. R. No. 90 of 1911.
  4. ஞானசம் 242:2
  5. A. R. No. 206 of 1927-3.
  6. A. R. No. 60 of 1911.
  7. குறுந்.54.
  8. புறம், 243.
  9. ஞானசம். 220:11.
  10. ஞானசம், 376:11.
  11. நம்பி. திருத்தொகை : 23.
  12. ஞானசம். 221 : 11