பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. திருநாவுக்கரசர்

வரலாறு

திருஞான சம்பந்தர் காலத்தில் அவரோடு உடனிருந்த சான்றோருள் திருநாவுக்கரசர் ஒருவர் என்பது முன்பே, கூறப்பட்டுள்ளது. கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இலக்கிய வரலாற்றில் சீர்த்த இடம்பெறுவோருள் இவரும் ஞான சம்பந்தர் போலச் சிறந்தவராவர்.

திருநாவுக்கரசரது பிள்ளைப் பெயர் மருணீக்கியார் என்பது. இவரது ஊர் நடுகாட்டிலுள்ள திருவாரூர்; இஃது. இப்போது தென்னார்க்காடு மாவட்டத்தில் பண்ணுருட்டிக்கு மேற்கில் மூன்று நான்கு கல்தூரத்தில் இருக்கிறது. அவ்வூரில் வேளாளர் குடியில் செல்வச் சிறப்பும் போர்ப் புகழும் சிறக்கப்பெற்ற புகழனார்[1] என்பார்க்கும் அவர் மனைவி மாதினியார் என்பார்க்கும் மகனாகப் பிறந்தவர் மருணீக்கியார். இவர்க்கு மன்னே பிறந்தவர் திலகவதி என்னும் சிவம்பெருக்கம் திருவுடையராவர்.

மருணீக்கியார் இளமையில் சிறந்த கல்வி பெற்று வருகையில் திலகவதியார்க்கு திருமண ஏற்பாடு செய்யப் பெற்றது. மணநாள் குறிக்கப் பெற்ற பின் மணமகனாக்க் குறிக்கப்கெற்றவர் போர்க்குச் செல்ல வேண்டியவரானார். போர் முடிவு பெறுதற்குள், புகழனார் இயற்கையெய்தினார் அவர் மனைவியாரும் இப்பெயர் வடமொழியில் கீர்த்தியென வரக்கண்டார். மக்கட்குக் கீர்த்தியெனவும் மா கீர்த்தியெனவும் பெயரிடலாயினர் போலும், பாண்டியன் மா கீர்த்தியென்பான் பெயர் தொன்னாளில் மாசீர்த்தி என இருந்து, அதன் பொருள் அறியாமல் ஏடு எழுதினோரால் மாகீர்த்தி எனப்பிழையாக எழுதப்பட்டிருக்க வேண்டும். இதற்கு இந்நாளைய வரலாற்று ஆராய்ச்சியேடுகளிலே போதிய சான்றுகள் உண்டு.உடன்கட்டை யேறினார். திலகவதி யாரும் மருணீக்கியாரும் உறவினரிடையே தமித் திருப்பாராயினர். இந்நிலையில் போர்க்குச் சென்ற மணமகனார், அப்“பொருவாரும் போர்க்களத்தில் உயிர் கொடுத்துப்


  1. இப்பெயர் வடமொழியில் கீர்த்தியென வரக்கண்டார். மக்கட்குக் கீர்த்தியெனவும் மா கீர்த்தியெனவும் பெயரிடலாயினர் போலும், பாண்டியன் மா கீர்த்தியென்பான் பெயர் தொன்னாளில் மாசீர்த்தி என இருந்து, அதன் பொருள் அறியாமல் ஏடு எழுதினோரால் மாகீர்த்தி எனப்பிழையாக எழுதப்பட்டிருக்க வேண்டும். இதற்கு இந்நாளைய வரலாற்று ஆராய்ச்சியேடுகளிலே போதிய சான்றுகள் உண்டு.