பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநாவுக்கரசர்

115


இத் திருப்பதிகத்தைப் பாடிப் பரவியதன் பயனாக மருரணீக்கியாருக்குச் சூலை நோய் நீங்கிற்று. அது நீங்கிய மகிழ்ச்சியால் அவர் பல திருப்பதிகங்களைப் பாடினார். அது முதல் அவர் திருகாவுக்கரசராய்ச் சிவபெருமானது திருவருளைப்பாடும் திருத் தொண்டரானார். தமக்குற்ற சூலை நோய் இறைவன் திருவருளால் வந்தது என்றும், அதனைத் தீர்க்கு முகத்தால் இறைவன் தம்மை ஆட்கொண்டான் என்றும்[1] உணர்ந்தார்; இறைவன்பால் பேரன்பு பெருகிற்று. மூத்து முதிர்ந்த முதுமை நிலையினும் அவர் தமக்கையுடன் திருக்கோயிலில் திருத்தொண்டு புரிந்து கொண்டும் திருப்பதிகம் பாடிக் கொண்டும் இருந்து வரலானார்.

இச் செய்தியறிந்த சமணருட் பலர், பல்லவ வேந்தனை அடைந்து திருநாவுக்கரசரின் செயலை மிகைப்படுத்தோதி அவன் உள்ளத்தே அவர்பால் சினமுண்டாகச் செய்தனர். வேந்தன் திருநாவுக்கரசரைத் தன்முன் வருமாறு பணித்தான். அவர், “நாமார்க்கும் குடியல்லோம்”[2] எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி, “நின்றுண்டார் எம்மை நினையச் சொன்ன வாசகமெல்லாம் மறந்தோம்; வந்தீர் யார்? மன்னனாவான் யார்?”[3] என்று எடுத்தோதி மறுத்தார். பின்னர், அவர் வேந்தன் முன் கொண்டுபோகப் பெற்று நீற்றறையில் சிறையிடப் பெற்றார்;[4] அங்கே அவர்கள் அவர்க்கு நஞ்சுகலந்த உணவு தந்தனர்;[5] வயக்களிறு கொண்டு அவர் தலையை இடறச் செய்தனர், இவற்றால் சிறிதும் அவர் ஊறுபடாதது கண்டும் அமையாது, முடிவில், அவரை ஒரு கல்லொடு பிணித்துக் கடலில் தள்ளி விட்டனர். ஆனால், நாவரசர், இறைவன் திருப்பெயரையே ஓதி[6] அக் கல்லோடே மிதந்து போந்து கரையேறித் திருப்


  1. “ஆமயந் தீர்த்து அடியேனை ஆளாக்கொண்டார், அதிகை வீரட்டானம் ஆட்சி கொண்டார்;” “சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே” (திருநா . 301 : 1, 3.1
  2. திருநா. 312 : 1.
  3. ௸ 312 : 8.
  4. ௸ 265 : 8.
  5. ௸ 70 : 5.
  6. ௸ 186: 7.