பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநாவுக்கரசர்

119

மீளவும் வந்து சேர்ந்தார். சின்னாட்களில் திருஞானசம்பந்தர் தென்பாண்டி நாட்டுக்குச் சென்றார்.

திருநாவுக்கரசரும் திருமறைக் காட்டினின்றும் புறப்பட்டுத் திருவீழிமிழலை, திருவாவடுதுறை முதலிய திருப்பதிகளை வணங்கி வழிபட்டுக்கொண்டு பழையாறைக்கு வந்துசேர்ந்தார். அங்கே,வடதளியென்னும் திருக்கோயிலில் இருந்த இறைவன் திருவுருவத்தைச் சமணர்கள் மறைத்து விட்டனர். அதனை அறிந்த திருநாவுக்கரசர், சமணர்கள் செய்த தீச்செயலைமறுத்து அவ்விடத்தே ஒருபுறத்தில் தங்கி உண்ணா நோன்பு [1] மேற்கொண்டார். உடனே பழையாறையிலிருந்த வேந்தர்பெருமானான சோழன் அதனை அறிந்து போந்து, சமணர்களை விலக்கி, வடதளி இறைவனது திருவுருவம் வெளிப்பட்டு விளங்கச் செய்தான். நாவரசரும் அவ்விறைவனைப் பதிகம் பாடிப் பராவிக்கொண்டு மேலும் பல திருப்பதிகளை வணங்குதற்குச் சென்றார்.

திருநாவுக்கரசர், திருவானைக்கா முதலிய பதிகள் பலவற்றை வணங்கிக் கொண்டு திருப்பைஞ்ஞீலிக்குச் செல்லும்போது, வழியில் இறைவன் ஒரு வேதியனாய்ப் பொதி சோறும் நீரும் கொணர்ந்து தந்து அவரது இளைப்பைப் போக்கிப் பைஞ்ஞீலிக்குச் செல்லும் வழியைக் காட்டி மறைந்தார். பைஞ்ஞீலி இறைவனைப் பரவிச் சென்ற நாவரசர் மலைநாட்டுப் பதிகள் பலவற்றிற்குச் சென்று, பின்னர்த் திருவண்ணாமலை யடைந்து இறைவனை வணங்கிப் பதிகம் பல பாடிப் பரவினார். அங்கிருந்து திருவோத்தூர், திருவேகம்பம் முதலிய திருப்பதிகளைத் தரிசித்துக் கொண்டு திருக்காளத்திக்குச் சென்றார். அங்கே கண்ணப்பர் செய்த திருத்தொண்டை வியந்து கொண்டே பன்னாட்


  1. இவ்வாறு உண்ணா நோன்பால் குற்றம் செய்தாரைத் திருத்தும் முறைமையினை இருபதாம் நூற்றாண்டில் காந்தியடிகள் மேற் கொண்டு நாட்டின் அரசியல் துறையிலும், அரசியல் இயக்கத் துறையிலும் உண்டாகிய குற்றங்கள் பலவற்றைக் கடிந்தமை ஈண்டு நினைவு கூரத்தக்கது.