பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநாவுக்கரசர் 123,

சமயம் சேர்ந்தவன் என அவனது வரலாறு கண்டோர்1 கூறுகின்றனர். சைவனாகிய அவன், பாடலி புத்திரம் என அந்நாளில் சமணரால் பெயர் வழங்கப்பெற்ற திருப்பாதிரிப்புலியூரிலிருந்த சமண் பாழிகளை இடித்துத் திருவதிகையில் தன் பெயரால் குணபரேச்சுரம் என்னும் கோயிலைக் கட்டினான் என்று2 திருத்தொண்டர் புராணம் கூறுகிறது. குணபரனென்பது முதன் மகேந்திர வன்மனுடைய சிறப்புப் பெயர்களுள் ஒன்று என்பதைத் திருச்சிராப்பள்ளியிலுள்ள அவனது கல்வெட்டே எடுத் தோதுகிறது. ஆகவே, குணபரனை முதன் மகேந்திர வன்மன் திருவதிகையில் ஓர் இடங்கண்டு அங்கே குணப ரேச்சுரத்தை எடுத்ததும், அந்நாளில் அத் திருவதிகையில் திருநாவுக்கரசர் தம்முடைய தமக்கை திலகவதியாரது திரு மடத்தில் இருந்து கொண்டு நாளும் இறைவனைத் திருப் பதிகம் பாடி வழிபட்டு வந்தனரென அவர் வரலாறு கூறு வதும் ஒப்பவைத்து நோக்குவோர், முதன்மகேந் திரவன்மன் திருநாவுக்கரசரால் சைவனானான் என்பதைத் தெளிவாகக் காண்பர்.

இனி, இம் முதன் மகேந்திரவன்மன் கி. பி. 600 முதல் 630 வரையில் ஆட்சி புரிந்த பல்லவ வேந்தனுமாவான். அவன் சமண வேந்தனாக இருந்தபோது திருநாவுக்கரசரும் தருமசேனர் என்ற பெயருடன் சமண் சமயத்திலிருந்து, அவன் சைவனாவதற்குச் சிறிது முன்பேசைவரானார். அவ்வேந்தன் சமணனாகஇருந்தபோது அச்சமணசமயத்தின்பால் அவ னுக்கு இருந்த பற்றின் மிகுதியை அவன் ஏனைச் சமயங்களை எள்ளியிகழ்ந்து எழுதியிருக்கும் மத்த விலாச நாடகமே நல்ல சான்று பகருகிறது. அப்பற்று மிகுதி முற்றும் அவன் சைவனான பின், சமண் சமயத்தின்பால் காழ்ப்பாய் மாறினமையே அவன் சமண் பாழிகளை-

____________________________ 1. The Pallavas by Prof. J. Dubreil and The Pallavas of Kanchi by A. Gopalan. p. 90.

2. சேக்கிழார் : திருநா. புரா. 
 146.
3. S. I.I.Vol.I, No.33.p. 29. 
4. திருநா. புரா. 143; 7.