பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநாவுக்கரசர் 125.

இனி, தமிழ் வரலாறு எழுதிய தஞ்சை ராவ்சாகிபு K. சீனிவாசப்பிள்ளை அவர்கள், முதல் மகேந்திரவன்மன் தனது ஆட்சியின் முற்பாதியில் சைவனாகி யிருக்கவேண்டும் என்றும், அஃதாவது கி.பி. 610-ஆம் ஆண்டை ஒட்டி யிருக்கலாம் என்றும், திருநாவுக்கரசர் சயினரான காலத்தில் அவர்க்கு "இருபத்தைந்து வயது இருந்திருக்கலாம் ” என்றும், அச்சமயத்திலேயே "பதினைந்து ஆண்டுகளாவது சென்றிருத்தல் வேண்டும் என்றும், மீண்டும் சைவத்தைத் தழுவியகாலத்து இவருக்கு வயது நாற்பதை ஒட்டியிருந்ததென்று கொள்ளலாம் என்றும், அவர் திரு ஞானசம்பந்தரை முதன் முதலாகச் சீர்காழியில் சந்தித்த போது அப்பர் சுவாமிகளுக்கு எழுபது ஆண்டுக்கு மேலிருக்கவேண்டும்" என்றும், ' இதனால்,"சுவாமிகள் திரு வதிகையில் சற்றேறக்குறைய முப்பதாண்டுகள் வதிந்தன ரென்று கொள்ளலாம் "என்றும், பின்பு ஞானசம்பந்தரைத் திருப்புகலூரில் முருக நாயனர் திருமடத்தில் "சந்தித்த போது கி. பி. 650-ஆம் ஆண்டுக்குச் சிறிது காலமுன்னராய் இருக்கலாம்” என்றும், அவர் இறைவன் திருவடி அடைந்தது கி. பி. அறுநூற்றைம்பத்தைந்தை ஒட்டியிருக்கலாமென்றும் கூறுவர்1. இனி, பெரியபுராண ஆராய்ச்சியுடையார், திருநாவுக்கரசர், "சைவராக மாறின பொழுது குறைந்தது 35 - 40 வயதினராதல் வேண்டும் அவர் 81 ஆண்டளவும் வாழ்ந்தவரென்ற கர்ணபரம்பரைக் கூற்றை நம்பினால், அவரது காலம் உத்தேசமாகக் கி.பி. 580-660 எனக் கோடல் பொருத்தமாகும் 2” என்று கூறுவர். திருஞானசம்பந்தர்முதன்முதலாகத்திருநாவுக்கரசரைச் சீர்காழிப்பதியிற் கண்டபோது, அவருடைய திருமேனியில் அசைவு தோன்றியிருப்பதைக் கண்டார் எனச் சேக்கிழார் குறிக்கின்றார்.3 இதனால் அக்காலத்தே திருநாவுக்கரசர் மிக்க முதுமை யெய்தியிருந்தனர் என்பது தெளிவாகிறது. ______________________________

 1தமிழ் வரலாறு.பக், 64 - 73.
 2.பெரிய புராண ஆராய்ச்சி by
  DrM.Rajamanikam p.8
 3 பெரிய புரா. ஞானசம். 270.

---