பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநாவுக்கரசர்

131

னான்கும், திருகுறுந்தொகை நூறும், தாண்டகம் தொண்ணூற்றென்பதும் ஆக இந்நாளில் முந்நூற்றுப்பதின் மூன்று திருப்பதிகங்களே கிடைக்கின்றன. இவற்றுட் சில திருப்பதிகங்கள் இடையிற் சில திருப்பாட்டுக்களும் இறுதியிற் சில குறைந்தும் காணப்படுகின்றன. அதனால் திருப்பதிகங்கள் அனைத்தும் சேரக் கூடுதலாகும் திருப் பாட்டுக்கள் 3130 என்று ஒரு தொகுதியாகக் கூறுவது இயலாதாகின்றது.

இனி, திருமுறைகண்ட காலத்தில், முந்நூற்றெழுபத்து மூன்று திருப்பதிகங்களே கிடைக்கப்பெற்றுப் பண் வகுக் கப்பட்டன; இதனைத் திருமுறைகண்ட புராணம், "பண் புற்ற திருஞானசம்பந்தர் பதிகமுந்நூற் றெண்பத்தினான்கினால் இலங்குதிருமுறை மூன்று, நண்புற்ற நாவரசர் முந்நூற்றேழ் மூன்றினால்,வண்பெற்ற முறை யொன்று நூற்றினால் வன்றொண்டர்"[1] என்று கூறி யிருப்பது காண்க. மிகுதியாகக் கிடைக்கும் ஆறு திருப்பதிகங்களும் இவை யென்றும் அவை கிடைக்கப் பெற்ற வரலாறு இது என்றும் அறிதற்குரிய வாய்ப்புக்கள் இல்லை.

இனி, கொல்லிப்பண் முதல் குறிஞ்சிப்பண் ஈறாக உள்ள திருப்பதிகங்கள் இருபத்தொன்றும், கொல்லி எனப்பண் வகுக்கப்பெற்ற திருநேரிசைத் திருப்பதிகம் இரண்டும், பண்வகுக்கப் பெறாத திருநேரிசைத் திருப்பதிகம் ஐம்பத் தாறும், கொல்லியெனப் பண் வகுக்கப்பெற்ற திருவிருத் தத் திருப்பதிகம் இரண்டும், பண் வகுக்கப் பெருத திரு விருத்தம் முப்பத்து மூன்றுமாகத் திருப்பதிகங்கள் நூற்றுப்பதினன்கும் ஒரு திருமுறையாகவும், திருக்குறுந் தொகைப்பதிகம் நூறும் ஒரு திருமுறையாகவும், திருத் தாண்டகம் தொண்ணுாற்றென்பதும் ஒரு திருமுறையாகவும் வகுக்கப் பெற்றுள்ளன. திருஞான சம்பந்தர் பாடிய திருப்பதிகங்கள் மூன்று திருமுறைகளாக வகுக்கப்பட்டமைபின், அவற்றின் தொடர்ச்சியாக இவற்றையும் மேற் கொண்டு இம் மூன்றையும் முறையே நான்காந்திருமுறை


  1. திருமுறை. க. புரா. 25.