பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

சைவ இலக்கிய வரலாறு

ஐந்தாந்திருமுறை ஆருந்திருமுறை என்று சான்ருேர் வழங்கலாயினர். இவற்றுள் ஆருந்திருமுறையைத் தாண் டகத் திருமுறை யென்றும், இத்தாண்டகங்களேப் பாடிய சிறப்பால் திருநாவுக்கரசரைத் தாண்டக வேந்தர் என் றும் அறிஞர் அன்பால் பாராட்டுவது வழக்கம்.

இத் திருப்பதிகங்களால் திருநாவுக்கரசர் பாடிய சிறப் பினையுடைய ஊர்கள் 125; இவற்றில் ஒரு திருப்பதிகமே பெற்றவை 76; இரண்டு திருப்பதிகங்கள்பெற்றவை 23: மூன்று திருப்பதிகங்கள் பெற்றவை 7 ; நான்கும் நான் குக்கு மேற்பட்டவையுமாகிய திருப்பதிகங்கள் பெற்றவை 19. அவை, திருவதிகை, திருவாரூர், திருவாவடுதுறை, திருவிடைமருதூர், திருவின்னம்பர், திருவையாறு, திருவொற்றியூர், திருக்கச்சியேகம்பம், திருக்கயிலாயம், திருக்கழிப்பாலை, தில்லைச் சிற்றம்பலம், திருச்சோற்றுத் துறை, திருநாகைக்காரோணம், திருநெய்த்தானம், திருப்பழனம், திருப்புகலூர், திருமறைக்காடு, திருமாற்பேறு, திருவீழிமிழலை என்பனவாகும். இவற்றுள் மிகுதியான திருப்பதிகங்கள் உள்ளவை. திருவாரூரும் அதனையடுத்துத் திருவதிகையுமாகும். இதுபோது கிடைத்துள்ள திருப்பதிகங்களைக்கொண்டு உணரும் கருத்து இது. திருநாவுக்கரசர் பாடிய 4900 திருப்பதிகமும் கிடைக்கப் பெற்று, அவற்றுட் சிறப்பிக்கப்படும் திருப்பதிகளையும் அவற்றிற்கு அமைந்த திருப்பதிகங்களையும் கொண்டு காணவேண்டிய தொன்று ; அக்காட்சி திருநாவுக்கரசர் அவ்வத் திருப்பதிகளிலும் தங்கிய காலத்தை உணர்வதற்குச் சிறந்த வாயிலாகும். இப்போது இவர் பாடிய திருப்பதிகங்களில் சிறிது ஏறக்குறையப் பதினாறில் ஒரு பகுதியே கிடைப்பதால், இதுகொண்டு திருநாவுக்கரசர் திருவதிகையிலோ திருவாரூரிலோ பன்னெடுநாள் தங்கினர் எனக் கருதுவது முறையாகாது.

திருப்பதிகங்களின் ஆராய்ச்சி

திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள், இறைவன் இயல்பு, உயிர்களின் இயல்பு, இறைவன் உயிர்க்கு அருள்