பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநாவுக்கரசர்

133

செய்யும் திறம், கற்றவர்களும் ஞானிகளும்பிறரும் இறைவனுக்கு அடியார்களாய் அன்புசெய்யும் முறை, இறைவன் அவர்களுடைய மனத்தின்கண் எழுந்தருளி இன்புறுத்துவது முதலிய பல பொருள்களை விரித்துக் கூறுகின்றன. "பொறிப்புலன்களைப் போக்கறுத்து உள்ளத்தை, நெறிப்படுத்து நினைந்தவர் சிந்தையுள், அறிப்புறும் அமுதாயவன்"[1] என்பதனுள், "பொறிப்புலன்களைப்போக்கறுத்து உள்ளத்தை நெறிப்படுத்து நினைந்தவர்" என்பது ஞானிகளும் பிறரும் அடிமையுற்று அன்புசெய்து வழிபடும் முறையினையும், "சிந்தையுள் அறிப்புறும் அமுதாயவன்" என்பது, அன்பர் மனத்தின்கண் தோன்றி இன்புறுத்தும் திறத்தினையும் புலப்படுத்துவது காணலாம். வேறொருபாட்டில், "சிந்தையுட் சிவமாய் நின்ற தன்மையோடு, அந்தியாய் அனலாய்ப் புனல் வானமாய்ப் புந்தியாப்ப் புகுந்து உள்ளம் நிறைந்த எம் எந்தை"[2] என்று கூறுவதும் மேலே இரண்டாவதாகக் காட்டிய இறையியல்பை வற்புறுத்தாநிற்கும்.

இனி திருநாவுக்கரசர் தொடக்கத்தில் சமணராயிருந்து, பின்பு சைவரானவராதலால், அதுகுறித்து, அவர் பண்டு தாம் சமண் சமயத்திலிருந்து கொண்டு சிவபெருமானை இகழ்ந்தது நினைந்துவருந்திக்கூறுவனவும், சமணர் நட்பை அருவருத்துக் கூறுவனவும் ஈண்டு எடுத்துக் குறிக்கலாகாத அளவு விரிந்து கிடக்கின்றன.

இவர் காலத்தே யோகநெறியும் ஞானநெறியும் இறை வழிபாட்டில் சீர்த்த இடம் பெற்றிருந்தன. யோகநெறி நின்றோர், பொறி புலன்களே ஒடுக்கி அகக் கண்ணால் உள்ளத்தே உணர்வு வடிவாய் எழுந்தருளும் இறைவனைக் கண்டு வழிபடுவர். இறைவனும் அவர்க்கு அங்கே வெளிப்பட்டுத் தேனாய் இன்னமுதாய்த் தெரிவரிய சிவானந்தத்தை நல்குவன். இவ்வழிபாட்டு முறையை நம் திருநாவுக்கரசர், "உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ளக் கிழியின் உருவெழுதி, உயிர் ஆவணம்செய்திட்டு உன்கைத்


  1. திருநா. 162 : 4.
  2. திருநா. 162:5,