பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139

திருநாவுக்கரசர்



நாவுக்கரசர், "சமண் தீர்த்து அன்றென்னை ஆட்கொண்டார் என்றும்"1 ' சூலைதீர்த்து அடியேனை ஆட்கொண்டார் என்றும் சுருங்க உரைக்கின்றர். தம்மியல்பும் இறையியல்பும் விரியக்கூறும் இவர், தம்மை இறைவன் ஆட்கொண்டு இன்புறுத்திய திறத்தை மிகவும் அழகுறக் கூறுகின்றார், இறைவன் இருநிலம் தீ நீர் முதலிய எல்லாமாகவும் அல்லவாகவும் இருப்பினும், தாம் விரும்பும் எண்ணும் இசையும் முதலாகிய பல கலைவடிவாகவும் இருக்கின்றான் , அவனையும் அவன் திறங்களையும் அறியும் பொறியின்றிப் பன்னாள் வேற்று நெறியில் கிடந்து உழந்த போது, இறைவன் உணர்வின்கண் ஒன்றி நின்று" நெறி தான் இது"3வென்றுகாட்டிஅருள்புரிந்து, '"சிவலோகநெறி அறியச்சிந்தைதந்து"4சிறப்பித்தான் என்பர். இதனை நாவரசர் தாமே, எண்ணோடு பண்ணிறைந்த கலைகளாய தன்னையும் தன்திறத்து அறியாப்பொறியிலேனைத் தன் திறமும் அறிவித்து நெறியுங் காட்டி, அன்னையையும் அத்தனையும் போல அன்பாய் அடைந்தேனைத் தொடர்ந்து என்னை ஆளாக்கொண்டான்"5 என்று குறித்தருளுகின்றார். இவ்வாறு தாம் ஆட்கொள்ளப் பட்டதை உணர்ந்தே அவர் தம்மை இறைவற்கு அடிமை என்பதைத் தெரிந்ததாகக் கூறுவார், ' என்னத் தன் அடியான் என்று அறிதலும், தன்னை நானும் பிரானென்று அறிந்தேன்' என்று இயம்புகின்றார், இறைவனைத் தனக்குப் பிரான் என்று தேறியொழுகும் திருநாவுக்கரசர், " "அளக்கலாகாத் தற்பரமாய்ச் சதாசிவமாய்7 " இருக்கும் இறைவனைப் பொது நிலையின் நீக்கித்8 தனிநிலையில் தம் உள்ளத்தே வைத்துக் காண்கின்றார், ______________________________

1. திருநா. 310 : 5.
2. திருநா. 310 ; 3.
3.      ஷ 257 : 4.
4 .     ஷ 268:4。
5.      ஷ 305 : 1. 
6       ஷ 205 ; 8
7       ஷ 312 : 7.
8."பொது நீக்கித்தனை நினையவல்லார்க்கென்றுந்துணை"-215:5