பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் நாட்டு வரலாறு

5

கட்டியவன் இவ்வேந்தர் பெருமான்,

பரமேசுரன் II (700-710) இவன் இராசசிங்கனான இரண்டாம் நரசிங்கனுக்குப்பின் அரசுகட்டில் ஏறியவன். இவன் கலியின் சேட்டைகளைக் கடிந்து வியாழ பகவான் .உரைத்த நீதிப்படி ஆட்சி செய்தான் என்று செப்பேடுகள்[1]கூறுகின்றன.

நந்திவன்ம பல்லவ மல்லன் (710-755) இவன், சிம்மவிஷ்ணுவின் மக்களில் ஒருவனான வீமவன்மன் வழி வந்தோருள், இரணியவன்மன் என்பவனுடைய மக்கள் நால்வருள் எல்லோருக்கும் இளையவன். பரமேசுவரன் மகப்பேறின்றி இறந்ததனாலும், இவன் உடன்பிறந்தோர் மூவரும் அரசேற்க இசையாமையாலும் இந்நந்திவர்மன் பல்லவ அரசுகட்டிலேறினான். இவன் நெடுங்காலம் ஆட்சி புரிந்தான் என்பர்.

தந்திவன்மன் (775-826) இரண்டாம் நந்திவன்மனுக்குப்பின் அவன் மனைவி இரேவா என்பாட்குப் பிறந்தவன் இத்தந்திவன்மன். இவன் ஐம்பது ஆண்டுகட்குக் குறையாமல் அரசுபுரிந்துள்ளான். இவன் காலத்தில் பாண்டி வேந்தர்கள் மேன்மையுறத் தலைப்பட்டனர்.

நந்திவன்மன் III (கி.பி. 826-849). இவன் தந்தி வன்மனுக்கு மகனாவான். இவனே தெள்ளாறெறிந்த நந்தி வன்மன் எனப்படுபவன். இவனுக்கும் பாண்டியர்கட்கும் கடும்போர் நடந்துளது.

நிருபதுங்கவன்மன் (கி.பி. 849-875), இவன் தெள்ளாறெறிந்த நந்திவன்மனுடைய மகன்; இவனோடு சோழநாட்டு அரிசிலாற்றங்கரையில் போர் உடற்றிய பாண்டியன், வரகுணன் மகனான ஸ்ரீமாற பரசக்ர கோலாகலன் என்பானாவன்.

நிருபதுங்கனுக்குப்பின்னர் அபராஜிதன், கம்பவன்மன், வயிரமேகவன்மன், சந்திராதித்தன், கந்தசிஷ்யன், விசய நரசிங்கவன்மன் எனப் பலர் ஆங்காங்கே இருந்திருக்கின்றனர். இவருள் அபராஜிதன் கங்கவேந்தனை முதல்


  1. S. I. I. Vol. No. 75. Verse. 26.