பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141

திருநாவுக்கரசர்

மையும் உடையதாகும். இப் புறப்பூசையால் மக்கள் இருமையும் இன்ப வாழ்வில் நிலைபெறுவார்கள் என்று திரு 'நாவுக்கரசர் கூறுவது கருதத்தக்கது. - இனி, திருநாவுக்கரசர் அன்பொழுக்கமாகிய அகப் பொருள் துறைகளில் இனிய பாட்டுக்கள் பலப்பல பாடி யுள்ளார். தலைமகளொருத்தி இறைவன்பால் பெருங் காதல் கொண்டு உளஞ்சிறந்ததிறத்தை,

"முன்னம் அவனுடைய நாமம்

  கேட்டாள்

மூர்த்தி அவன் இருக்கும்

  வண்ணம் கேட்டாள்

பின்னை அவனுடைய ஆரூர்

  கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே

  பிச்சியானாள்

அன்னையையும் அத்தனையும்

  அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தார்

  ஆசாரத்தைத்

தன்னை மறந்தாள் தன் நாமம்

  கெட்டாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன்

   தாளே"1

என்ற திருப்பாட்டால் இனிதுரைத் திருப்பது அறிஞர் பலரும் நன்கறிந்ததொன்று. இப் பெற்றியளாய நங்கை, குயிலினங்களையும் ஏனைக் குருகினங்களையும் வண்டுகளை யும் நோக்கிக் காதல் கைம்மிகுதலால் கையற்றுப் புலம்பு

"மனைக்காஞ்சி இளங்குருகே
   மறந்தாயோ மதமுகத்த 
பனைக்கைம்மா உரிபோர்த்தான்
   பலர்பாடும் பழனத்தான் 
நினைக்கின்ற நினைப்பெல்லாம்
  உரையாயோ நிகழ்வண்டே 
சுனைக்குவளை மலர்க்கண்ணுள்
 சொல் தூதாய்ச் சோர்வாளோ" 2

என்று கூறி அழுங்குவதும், "அகலிடத்தார்.ஆசாரத்தை" அகன்றொழுகும் இந்நங்கையின் செயல் கண்ட தாயரும் பிறமகளிரும்,- ______________________________ 1. திருநா. 239; 7. 2. திருநா. 12:3.