பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
142



"கருகு கண்டத்தன்காய்கதிர்ச்

 சோதியன்

பருகுபால் அமுதே எனும்

 பண்பினன்

அருகு சென்றிலள் ஆவடு

 தண்டுறை 

ஒருவன் என்னே உடைய கோ

 என்னுமே "1.

என்று தம்மிற் பேசிக் கொள்வதும், பெற்றோரும் பிறரும் போந்து அந்நங்கையை நோக்கி நீ மனையிடத்தே இருத்தல் முறையே யன்றி வெளியே இறைவனே நாடிச் சேறல் கூடாது என்றாராக, அவள், அவர்களை மறுத்துரைப்ப, அவர்கள் மனம் வருந்தி,

"மாது இயன்றுமனைக்கு இரு 
    என்றக்கால் 
 நீதிதான்சொலநீஎனக்குஆர் 
     எனும்

சோதிஆர்தரு தோணி புரவர்க்குத் தாதியாவன் நான் என்னும் என்தையலே "2 என்பதும், இவள் செயலைக் கண்டோருட் சிலர், இவட்கு இம்மால் உண்டாதற்குக் காரணமான இறைவனைக்குறை கூறுவாராய், -

 "பண்ணி னேர்மொழியாள் 
   பலியிட்டஇப்
 பெண்ணை மால் கொடு 
    பெய்வளைகொள்வது 
 சுண்ண மாடிய தோணி 
    புரத்துறை - 
 அண்ணலாருக்குச் சால 
   அழகிதே "3

என்று இயம்புவதும், முதுபெண்டிர் சிலர் போந்து, "நங்காய், நின்னாற் காதலிக்கப்படுபவன் நின்மலனாகிய இறைவன்; அவனைக் கூடுவது என்பது இயலாத தொன்று " என்பாராய்,- "முல்லை வெண்ணகை

  மொய்குழலாய் உனக்கு 
அல்லனாவது அறிந்திலை நீ ; 
   கனித்
தொல்லையார் பொழில் தோணி 
   புரவர்க்கே 
நல்லையாயிடுகின்றனை 
   நங்கையே "4

என்று தெருட்ட முயல்வதும், அவ்வழியும் தெருண்டு தன்- ______________________________

1. திருநா. 143 : 5.
2. திருநா. 159 : 1.
3  ஷ 159 :.5.
4. ஷ 159 : 6,