பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
144

சடையில் மறைத்துள்ளீர் : இச்செய்தியை உமையம்மை யறியின் பெருந்தொல்லை விளையுமே" என்பாராய் "எங்கள் பெருமான் ஓர் விண்ணப்பம் உண்டு அது கேட்டருளீர், கங்கை சடையுட் கரந்தாய் அக்கள்ளத்தை மெள்ள உமை நங்கை அறியின் பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே"1 என்றும், பிறைக்கும் பாம்புக்கும் பகையென்பது பற்றி, "பைதற் பிறையொடு பாம்புடன் வைத்த பரிசு அறியோம், எய்தப்பெறின் இரங்காது கண்டாய் எம் இறையவனே" 2 என்றும், மேனியில் கிடக்கும் பாம்பைக் கண்டு அம்மேனியிற் பங்குடைய தேவியாகிய அரிவை அஞ்ச, அவரைக் கண்டு அப்பாம்பு மயில் என்று ஐயுற்று அஞ்சி வருந்த, அப்பாம்பைக் கண்டு பிறைத் திங்கள் அஞ்சி நடுங்க, இவற்றைக் காணும் தலமாலையிலுள்ள தலைகள் நகுகின்றன என்பார்,

"கிடந்த பாம்பு அருகுகண்டு

  அரிவை பேதுறக்
கிடந்த பாம்பு அவளை ஒர் 
  மயிலென்று ஐயுறக் 
கிடந்த நீர்ச் சடை மிசைப் 
  பிறையும் ஏங்கவே 
 கிடந்துதான் நகுதலைக் 
   கெடிலவாணரே"3

என்று இவ்வாறு பலவும் வருவன அறிஞர் கண்டு இன்புறக்கடவர்.

இவ்வகையிலே நம் நாவுக்கரசர் இறைவனை முன்னிலைப் படுத்தி இங்கிதமாகப் பாடிய பாட்டுக்கள் பல. -

"இறைவா, சாகும் நாளில், பொறிபுலன்கள் நிலைகலங்கி அலமருதலால், யான் வேறு பற்றுக்கோடின்றி உன்னை எங்குற்றாய் என அழைப்பேன்; அப்போது நீ போந்து இங்குற்றேன் என்று சொல்லியருள வேண்டும்"'என்பார்,"சங்கொத்த மேனிச் செல்வா, சாதல் நாள் நாயேன் உன்னை எங்குற்றாய் என்ற போதால் இங்குற்றேன் என் கண்டாயே"4 என்றும், இறைவன் தம் உள்ளத்தே புகுந்து காட்சி வழங்கினராக, அக்காட்சியின்பத்தில் மகிழ்வுற்றுத்- ______________________________

1. திருநா. 104 : 8.
2. திருநா. 107: 1.
3.    ஷ 10 : 8. 
4.    ஷ 75: 8.