பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147

திருநாவூக்கரசர்


தேறுதல் ஓம்புக"1என்பது திருமறை. இறைவன் திரு வருளோ,அங்ஙனம்தொடர்பற்றார்க்குப்பற்றுக்கோடாய் நின்று பேரின்ப வாழ்வை நல்கும் என்பாராய், "தந்தை தாயொடு தாரம் எனும்தளைப் பந்தம் அங்கு அறுத்துப் பயில்வு எய்திய கொந்தவிழ் பொழில் கொண்டீச்சரவனைப் பாடுமின் பரலோகத்திருத்துமே"2 என்றும்," அற்றுப் பற்றின்றி யாரையும் இல்லவர்க்கு உற்ற நற்றுணையாவன்"3 என்றும் அறிவுறுத்துகின்றார். இளையவர்க்கு இனிய கனியும் கட்டிபட்ட கரும்பும் இன்பங் தருவன; காளைப்பருவத்தார்க்கு இளமங்கையர் கூட்டமும் ஆண்மைச் செவ்விபெற்றார்க்கு அரசியற் போகமும் இன்பந்தருவன : இறைவன் இப்பெற்றியார் அனைவர்க்கும் அவரவர் விழையும் இன்பங்களெல்லாவற்றினும் மேலான இனிமை நல்கும் இனியன் என்பார், - "கனியினும் கட்டிபட்ட கரும்பினும்

பனிமலர்க்குழல் பாவை.  
நல்லாரினும்
தனிமுடிகவித்தாளும் அரசினும் 
இனியன் தன்னடைந்தார்க்கு 
இடைமருதனே "4
என்றும், இவ்விறைவன், ' "உறவனாய் நிறைந்து உள்ளம் குளிர்ப்பித்தலும், இறைவனாகி நின்று எண்ணிறைந்து இருத்தலும்"5 உடையனாதலின், அவனுக்கு "அஞ்சியாகிலும் அன்புபட்டாகிலும்"6' மக்கள் நெஞ்சில் நினைந்து வாழ்தல் வேண்டும் என்றும், "அனுசயப்பட்டு அது இது என்னாது, கனிமனத்தோடு கண்கள் நீர்மல்க இறைவனை வழிபடும் புனித வாழ்வு வாழ்வோர் மனிதரில் தலையான மனிதர்" 7 என்றும் நம் திருநாவுக்கரசர் வழங்கும் தெரு ளுரை மிகப்பலவாகும்.

______________________________

1. திருக்குறள், 506. 
2. திருநா. 184 : 4.
3. திருநா. 181 : 6.
4.     ஷ  128 :10.
5.     ஷ  182 : 5.
6.     ஷ. 137 : 9.
7.     ஷ  179 : 6.