பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
148

 திருநாவுக்கர்சர் பாட்டில் சிறப்புப் பெற்றவர்கள்

மக்கட்கு நல்லறிவு கொளுத்தி மேம்படும் திருநாவுக்கரசர், தாம்பேணிய நன்னெறிக்கண் நின்று சிறப்புற்ற சான்றோர் பலரைத் தம்முடைய திருப்பாட்டுக்களில் ஆங்காங்குக் குறித்துப் பாடியுள்ளார். அவருட் பலர், அவர் காலத்துக்கு முன்னிருந்தோராவர். சோழன் செங்கணான், சண்டேசுரர், சாக்கிய நாயனர், கண்ணப்பர், கணம்புல்லர், அமர் நீதி, நமிநந்தி முதலியோர் அவருள் முன்னணியில் நிற்கும் சான்றோராவர். - <b1.சோழன் செங்கணான்b/>. இச் சோழ வேந்தனைக் கோச்செங்கணான்1 என்றும், கோச்சோழன் என்றும் வழங்குவதுண்டு, இவ்வேந்தர் பெருமானைத் திருஞானசம்பந்தரும் பாடிப் பாராட்டியிருப்பதை முன்பே கூறினோம். இவ்வேந்தன், முற்பிறவியில் சிலந்தியாயிருந்து திருவானைக்காவிலுள்ள இறைவ னுக்குத் திருநிழற்பந்தர் செய்து, மறுபிறப்பில் கோச் செங்கணானாகப் பிறந்து சிறப்புற்றான் என்பர்; இதனைத் திருநாவுக்கரசர், " சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழற் பந்தர்செய்து, உலந்து அவண் இறந்தபோதே கோச்செங்க ணானுமாகக், கலந்தநீர் காவிரி சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள், குலந்தனிற் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்ட னாரே"2 என்று குறிக்கின்றார். சிலந்தியாயிருந்து சோழனை இவ் வரலாற்றுக் குறிப்பு இடைக்காலக் கல்வெட்டுக்களில் நிலைத்த இடம்பெற்றுளது. இதனைச் சிலந்தியைச் சோழனாக்கினன் திருத்தோப்பு எனவரும் கல்வெட்டு3 இனிது குறிக்கின்றது. ______________________________ 1. A. R. No. 205 of 1904. இவர் சிவபெருமானுக்கு எழு. பதுக்கு மேற்பட்ட கோயில்கள் கட்டினாரென்று திருமங்கை மன்னன் பெரிய திருமொழி (vi: 6.அ.)யிற் கூறுகின்றார். இவை செங்கற்களாலாகியவை யென்பது கல்வெட்டுக்களால் தெரிகிறது. 2. திருநா.49:4;, 289:8;,297:6 3. S. I. I. Vo!. IV. No. 426.