பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

149

திருநாவுக்கரசர்


<b2.சண்டேசுரர்.b/> திருஞானசம்பந்தரும் இச் சான்றோரைத் தம்முடைய பாட்டுக்களில் நன்கு பாராட்டி யுள்ளார். இவரைத் தண்டி யென்றும் வழங்குவதுண்டு. இவர் வரலாறு திருத் தொண்டர் புராணத்துள் சேக்கிழாரால் விரித்துரைக்கப்படுகிறது. அதன் சுருக்கமாக, இங்கே திருநாவுக்கரசர்,"அண்டமார் அமரர் கோமான் ஆதி எம் அண்ணல்பாதம், கொண்டு அவன் குறிப்பினாலே கூப்பினன் தாபரத்தைக், கண்டு அவன் தாதை ஆய்வான் காலற எறியக்கண்டு, 'தண்டியார்க்கு அருள்கள் செய்த தலைவர் ஆப்பாடியாரே1" என்றும், "அங்கு அரவத்திருவடிக்கு ஆட் பிழைப்பத் தந்தை அந்தணனை அற எரிந்தார்க்கு அருள் அப்போதே, கொங்கரவச் சடைக்கொன்றை கொடுத்தார்" 2 என்றும் குறித்தருளுகின்றார். இவ்வாறு கொன்றை முதலியன பெறும் நிலை, சண்டேசுரபதம் என்பர்; இது பற்றியே இவர் சண்டேசுரர் எனப்படுவாராயினர்.

<b3.சாக்கிய நாயனார்b/>.

கி. பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே பெளத்தசமயம் தென்னாட்டிற் படர்ந்திருந்ததென்றும் பெளத்தர்கட்குச் செல்வச் சிறப்புடைய மடங்கள் பல இருந்தனவென்றும் வரலாறு கூறுகிறதன்றோ ? இச்சாக்கிய நாயனார், அவர்களை அடைந்து அவர்கூறிய பெளத்தசமயத்தை மேற்கொண்டு அவரது வேடம்பூண்டு அவரிடையே சின்னாள் ஒழுகியிருந்து பின்னர்ச் சைவராயினவர். பெளத்த சமயத்தைக்கண்ட கோதமபுத்தர் சாக்கியர் மரபிற் பிறந்தவரானதால், அவர் கண்டுரைத்த அறத்தை மேற்கொண்டார் சாக்கிய ரெனப்பட்டனர். சாக்கியர்க்குரிய கோலத்தோடு இருந்தே சிவத்தொண்டு புரிந்தமையின் இவர் சாக்கியரெனவே வழங்கப்படுவாராயினர் ; அதனால், இவரது இயற்பெயர் மறைந்து போயிற்று. இவர் எறிந்த கற்களே இறைவன் புது மலர்களாகக் கருதி மேற்கொண்டு வந்தனர் என்பர். ______________________________

 1. திருநா. 48: 4.
 2. திருநா. 289 : 9.

/