பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
152


தொகையும், " அருநம்பி நமிநந்தி" என்று குறிப்பது ஈண்டு நோக்கத்தக்கது. திருநாவுக்கரசர், இந் நந்தியாரை "நம்பி நந்தி "என்றே குறித்துரைக்கின்றார். இவர் திருவாரூரில் இறைவனுக்கு நீரால் திருவிளக்கேற்றினரென் பது வரலாறு. இதனைத் திருத்தொண்டர் திருவந்தாதி, "வேத மறிக்கரத்து ஆரூரற்கு விளக்கு நெய்யைத்

தீது செறி அமண் கையர் அட்டாவிடத்து எண்புனலால், ஏதம் உறுக அருகர் என்று அன்று விளக்கெரித்தான்,
நாதன் எழில் ஏமப்பேரூர் அதிபன் நமிநந்தியே"[1] என்று கூறுகிறது. நமிநந்தியார் திருநாவுக்கரசர்க்குக் காலத்தால் மிக முற்பட்டவராய்ச் சான்றோர் வியந்து பாராட்டும் சால்பு உடையராய் விளக்கமுற்றிருந்தமையின், திருநாவுக்கரசர், "தொண்டன் நம்பி நந்தி நீரால் திருவிளக்கிட்டமை நீணாடு அறியுமன்றே" 2 எனவும், "அடித்தொண்டன் நந்தியென் பான் உளன் ஆரூர் அமுதினுக்கே"3 ' எனவும், திருவாரூர் அறநெறித் திருத்தாண்டகத்தில் இறைவனை, "நந்திபணி கொண்டு அருளும் கம்பன்"4 எனவும் பாராட்டியுள்ளார். இந் நமிநந்தியார், திருவாரூரில் வாழ்ந்தநாளில் இறைவன் திருத்தொண்டர்க்கு அவர் பெருவிளக்கமாய்த் திகழ்ந்தார் என்பதுதோன்ற,

"கொடிகொள்விதானம்

கவரிபறைசங்கம்கைவிளக்கோடு 
இடிவில்   
பெருஞ்செல்வமெய்துவர் 
எய்தியும் ஊனமில்லா,
அடிகளும் ஆரூரகத்தினராயினும் 
அந்தவளப் பொடிகொண்டு 
அணிவார்க்கு இருளொக்கும் 
நந்திபுறப்படினே"5' என்று விதந்தோதிப்பரவுகின்றார். திருவாரூர்த்திருவிருத்தத்துள். நமிநந்தியடிகளை "ஆராய்ந்தஅடித்

தொண்டர் ஆணிப்பொன்"6 ' என்று திருநாவுக்கரசர் பாராட்டினராக, இதனைக்கண்டு வியப்புற்ற சேக்கிழார் சுவாமிகள், நமிநந்தியடிகள் வரலாறு கூறுமிடத்து,' "தொண்டர்க்கு ஆணியெனும் பேறு திருநாவுக்கரசர் விளம்பப் பெற்ற பெருமையினர் 7” என எடுத்தோதி இன்புறு-


2. திருநா. 103 : 2.
3. திருநா. 103 : 4. 

.4 ஷ 248 : 4.

5,   ஷ    103 : 6.
6.   ஷ     103 : 2. 

7திருத்தொண். புராணம் நமி நந்தி. 31.


  1. திருத்தொண். அங்.. 31.