பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திருநாவுக்கரசர்

153

கின்றார். கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருக்கழுக்குன்றத்தில் நமிநந்தியடிகள் பெயரால் திருமடமொன்று இருந்ததென அவ்வூர்க் கல்வெட்டொன்று1 கூறுகிறது.

"இனி, தம் காலத்திலிருந்த திருஞான சம்பந்தர், அப்பூதியடிகள், திலகவதியார் முதலியோர்களைத் திருநாவுக்கரசர் சிற்சில தொடர்களால் குறிப்பிடுவது கருதத்தக்கது. திரு நாவுக்கரசரது வாழ்வில் இவர்கட்குத் தொடர்புண்டு; திரு நாவுக்கரசரோ தம் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் சிலவற்றைக் குறித்துரைக்கும் இயல்புடையவர். இவ்வாற்றால், இவர்களைப் பற்றி நம் நாவரசர் நமிநந்தியடிகளைக் குறித்ததுபோல விரிந்த குறிப்புக்கள்பலவற்றை உரைத் திருப்பரென நினைத்தற்கு இடமுண்டு. ஆனால், அவர் பாடிய திருப்பதிகங்களில் பதினாறில் ஒரு பகுதியே கிடைத்துள்ளமையின், அக் குறிப்புக்கள் பலவும் மறைந்து போயின எனக் கொண்டொழிவது நம்மனோர்க்குச் சால்பாகும். திருஞானசம்பந்தர்க்குத் திருவாவடுதுறையில் இறைவன் செம்பொன் வழங்கியதையும், திருமறைக்காட்டில் அவர் மறைக்கதவு மூடப் பாடியதையும், "கழுமலஆரர்க்கு அம்பொன் ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனரே"2' என்றும் "திறக்கப் பாடிய எனினும் செந்தமிழ், உறைப்புப் பாடி அடைப்பித்தாரும் உந்நின்றார்"3 என்றும் குறித்திருக்கின்றார், தம்பால் பேரன்பு கொண்டொழுகிய திங்களூர் அப்பூதியடிகளை, "அஞ்சிப் போய்க் கலிமெலிய அழல் ஓம்பும் அப்பூதி, குஞ்சிப்பூவாய் நின்ற சேவடியாய்"4என்று குறித்துப் பாடுகின்றார். 'அம்மை யார் எனக்கு என்று என்று அரற்றினேற்கு அம்மையாரைத் தந்தார் ஆரூர் ஐயரே 5" என்பதனால் திலகவதியம்மை யாரைத் திருநாவுக்கரசர் சுட்டிக் காட்டுகின்றார்.6 _______________________________ 1 S. I. I. Vol. III. No. 75. 2. திருநா. 56 : 1. 3. திருநா. 164: 8. 4. ஷ 12 :10. 5. ஷ 121:6. 6. A thesis on தேவாரம்&பெரியபுராணம் & byVidvanΚ. Vellaivaranan on behalf of the Annamalai University, in 1935-6,