பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

155

திருநாவுக்கரசர்

 கருணைத் திறமான அதன் மெய்த் தன்மை அறிந்து துதிப்பதுவே மேல்கொண்டு வணங்கிச் சென்றனர் எனக் கூறுகின்றார்,

< bதிருநாவுக்கரசரும் திருப்பதிகளும்b/> திருநாவுக்கரசர் தமிழ் நாட்டில் இறைவன் எழுந்தருளும் திருப்பதிகள் பலவற்றிற்கும் சென்று அங்குள்ள இறைவனை இசைநலம் பெருகப் பாடிப் பரவியுள்ளாரென்று அவர் வரலாறு கூறுகிறது. திருநாவுக்கரசருடைய திருப் பதிகங்களுள் இப்போது நூற்றியிருபத்தைந்து திருப்பதி கட்குரிய திருப்பதிகங்கள் சிலவே கிடைத்துள்ளன. அவற்றால், அவ்வத் திருப்பதிகளில் திருநாவுக்கரசர் அக்காலத்தில் தாம் கண்டனவும் கேட்டனவுமாகிய செய்திகள் பல அறியப்படுகின்றன. அவை வரலாற்றுண்மை கொண்டும் விளங்குகின்றன. அவ்வத் திருப்பதிகளின் இயற்கைக் காட்சிகளும் திருநாவுக்கரசருடைய திருப் பாட்டுக்களில் சிறப்பெய்துகின்றன.

<b1.|தில்லைப்பெருங் கோயில்b/>. இங்கே விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் திருக்கூத்து நிகழ்த்துகின்றான். அதனைக் காணும் நாவரசர் " சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால், பீளையுடைக் கண்களால் பின்னைப் பேய்த் தொண்டர் காண்பதென்னே' என்று பாடிப் பரவுகின்றார், அவனுடைய குமிண் சிரிப்பு திருநாவுக்கரசர்க்குப் பேரின்பம் தந்து "என்று வந்தாய்" என்னும் திருக்குறிப்பைப் புலப்படுத்து கிறது. அவனது "சிரித்த முகம்" நாவரசர் உள்ளத்தே நன்கு பதிந்து விடுகிறது. அதனையே நினைந்து நினைந்து பல திருப்பாட்டுக்களில் எடுத்தோதி இன்புறுகின்றார், அக்காலத்தே திருவம்பலம் பொன்வேயப் பெற்றுச் செம்பொன் அம்பலமாய்த் திகழ்ந்தது; அதனைத். '" தூய செம்பொன்னினால்எழுதி மேய்ந்த சிற்றம்பலம்"3 ______________________________

 1. திருநா. புரா. 75.
 2. திருநா. 36:1.
 3. திருநா. 116:8.