பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{|Rh|157|திருநாவுக்கரசர்}}


கரசரும்அக்காலத்தவராதலின். அதனை"அதியரையமங்கை அமர்ந்தான் தன்னே" எனத் தாம் பாடிய திருத்தாண்டகத்துள் எடுத்தோதுகின்றார். இவ்வூரருகேயோடும் கெடிலத்தை அந்நாளையவர் தென்றிசைக் கங்கையென வழங்கினர்; ஆகவே,அவ்வழக்காறும்தோன்ற நம் நாவரசர், "தென்றிசைக் கங்கை அது எனப்படும் கெடிலம்"1என்று பாராட்டியுள்ளார். இக்கெடிலம் கொணரும் நீர் நலத்தால்இவ்வூர் மிக்கவளம்பொருந்தியிருக்கும் திறம்,திருநாவுக் கரசர்திருப்பாட்டுக்களில் பலவிடங்களில் அழகுற எடுத்துக் கூறப்படுகிறது. நீர் நிலைகளில் நீலம் முதலிய மலர்கள் மலர்ந்திருப்பதும், வண்டுகள் தேனுண்டு பாடுவதும், நீர்த் திரைகள் அலைப்பதால் மலரில் வீற்றிருக்கும் அன்னங்கள் ஊசலாடி மகிழ்ந்து உறங்குவதும், மகளிர் நீராடி இன்புறுவதும் பிறவும் இனிய செஞ்சொற்களால் சொல்லோவியம் செய்யப் பெற்றுள்ளன.

3. திருவொற்றியூர்.

தொண்டை நாட்டில் நாவரசர் காலத்தில் சிறந்து விளங்கிய திருப்பதிகளுள் இதுவும் ஒன்றாகும். கடற்கரையில் உள்ளதாகிய இவ்வூர், கடலிற் செல்லும் கலங்கள் கடல் திரையின் இடைநின்று நல்ல காட்சி நல்குவதும், கடற் சங்குகள் கரையில் வந்து மேய்வதும் திருவொற்றியூரில் இன்றும் காணப்படும் நிகழ்ச்சிகளாகும். இவற்றைத் திருநாவுக்கரசர், " விடுகலங்கள் நெடுங்கடலுள் நின்று தோன்றும், திரைமோதக் கரையேறிச் சங்கம் ஊரும் திருவொற்றியூர் "2' என்று குறிக்கின்றார். இவ்வூர், பண்டை நாளில் சிறந்த கல்வி நிலையமாக விளங்கிற் றென்பது அவ்வூர்க் கல்வெட்டுக்களால் விளக்கமுறு கின்றது. திருவொற்றியூர்க் கோயிலிலுள்ள மண்டபம் ஒன்று வியாகரணதான மண்டபம் எனப் பன்னிரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில் குறிக்கப்படுவதே போதிய சான்று பகரும். அம்மண்டபம் அக் காலத்துக்கு முன்பே _______________________________

1. திருநா. 217 : 1, 4.
2. திருநா.  10 : 6.
3.     ஷ.  259 : 4.