பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

159

திருநாவுக்கரசர்

 - "தொல்லை நீர்க்கோணப் பிரானைக் குறுகக் குறுகா கொடு வினயே"1எனப் பரவுகின்றார். இப்பெயரே, பிற் காலத்துக் கல்வெட்டுக்களிலும்2 இறைவன் திருப்பெயராகக் காணப்படுகிறது. முதல் இராசராச சோழன் காலத்தேயே திருப்புகலூரில் திருநாவுக்கரசர்க்குத் திருக் கோயில் இருந்ததென்றும், அக் கோயிலில் நாள் வழி பாட்டின் பொருட்டு வேந்தனால் நிவந்தம் விடப்பட்டதென்றும் கல்வெட்டால்2அறிகின்றோம். இவரைப் பிற் காலத்தார் பேணிப் பரவிய திறத்தைத் திருநாவுக்கரசரும் கல்வெட்டுக்களும் என்ற தலைப்பின் கீழ்க் கூறுதும். இது காறும் கூறியவாறு திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள் பலவும் எடுத்து அவற்றிற்குரிய திருப்பதிகளையும் அவை பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களையும் எழுதப் புகின் இவ்வுரை வரம்பின்றிப் பெருகுமாதலின் இம் மட்டில் அமைவாம்.

திருப்பதிகங்களின் சொன்னலங் காண்டல்

திருநாவுக்கரசருடைய திருப்பதிகங்களிற் காணப்படும் உவமைகளும் அரிய சொல்லாட்சிகளும் இலக்கிய ஆராய்ச்சியாளர்க்குப் பேரின்பம் தருவனவாகும். திரு நல்லூரிடத்தே இறைவன் எழுந்தருளியிருப்பவும், அவனை உலகெல்லாம் தேடித் திரிகின்றவர்களைப் பார்த்து, அவர்கள் ஆற்றில் கொடுத்தொழிந்த பொருளொன்றைக் குளத்தில் தேடிப்பார்ப்பவர்களையொப்பர் என்பாராய்,

"தேற்றப்படத் திருநல்லூரகத்தே 
 சிவன் இருந்தால், 
 தோற்றப்படச் சென்று கண்டு 
 கொள்ளார் தொண்டர், 
 துன்மதியால், 
 ஆற்றில் கொடுத்துக் 
 குளத்தினில் தேடிய ஆதரைப் 
 போல், 
 காற்றின் கடுத்து உலகெல்லாம் 
 திரிதர்வர் காண்பதற்கே4" என்றும், இறைவனது உண்மையுணராதவர் சிலர், உணர்ந்து வழிபடுவாரைக் கண்டு, உங்கள் இறைவன்

______________________________

1. திருநா. 106: 10. 
2. A. R. 65 of 1927-8. 22nd 
 regnal year of Rajaraja, the 
 Great. 
3. A. R. No. 68 of 1927-8.
4. திருநா. 97 :6.