பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தமிழ் நாட்டு வரலாறு

7

கோச்சடையன் இரணதீரன் (கி.பி. 670-710):இவ்வேந்தன் மாறவன்மன் அரிகேசரிக்கு மைந்தன்; நம்பியாரூரர் சேரமான் பெருமாளுடன் மதுரை திருப்பரங் குன்றம் சென்று.இறைவனைவழிபட்டபோது உடனிருந்து வேண்டும் சிறப்புக்களைச் செய்தவன்; இரணரசிகன் என்ற சளுக்கி வேந்தனான விக்கிரமாதித்தனை வென்றதனால் இரணதீரன் என்ற சிறப்பினை இவ்வேந்தன் பெற்றான்.

அரிகேசரி பராங்குச மாறவன்மன் (கி.பி. 710-765): இவன் கோச்சடையன் இரணதீரனுக்கு மகன்; இவனைத் தேர் மாறன் என்றும் முதல் இராசசிம்மன் என்றும் வழங்குவதுண்டு. கொங்கு நாட்டுத் திருப்பாண்டிக் கொடுமுடிக்குச் சென்று சிவனைச் சிறப்புற வழிபட்டான்.

நெடுஞ்சடையன் பராந்தகன் (கி.பி. 765-790): இவன் அரிகேசரி பராங்குசனுக்குக் கங்கவரசன் மகள் பூசுந்தரிபாற் பிறந்தவன். வேள்விக்குடிச் செப்பேடுகளும் சீவரமங்கலத்துச் செப்பேடுகளும் இவன் காலத்தனவாகும். திருமாலிடத்து இவன் பேரன்புடையவன்; “பரம வைஷ்ணவன் தானாகி நின்றிலங்கு மணி நீண்முடி நில மன்னவன்” என்று சீவரமங்கலத்துச் செப்பேடுகள் கூறுகின்றன.[1]

இராசசிம்ம பாண்டியன் I (கி.பி. 790-792): இப்பாண்டியன் நெடுஞ்சடையன் பராந்தகனுடைய புதல்வன்.

வரகுண மகாராசன் (கி.பி. 792-835): இவன் இரண்டாம் இராசசிம்மனுடைய மகன்; இவனைக்" கொற்றவர்கள் தொழுகழற்கால் கோவரகுண மகாராசன் "எனச் சின்னமனூர்ச் செப்பேடுகள் சிறப்பிக்கின்றன: சிவன் திருவடிக்கண் பதிந்த சிந்தையுடையவன்; இவனது ஆட்சி சோழநாடு முழுதையும் தன்பாற் கொண்டிருந்தது.

சீமாறன் சீவல்லபன் (835-862): இவன் முதல் வரகுணனுடைய புதல்வன். இவனுக்கு ஏகவீரன், பர-


  1. T. V. S. பாண்டியர் வரலாறு. 2-ஆம் பதிப்பு. பக். 53.