பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
163திருநாவுக்கரசர்



-வனை வழிபடுமிடத்துத் தொண்டர், " சோத்தம் எம்பெரு மான்" என்று வழங்குவது தொன்று தொட்டு வரும்மரபு. சோத்தமாவது இழிந்தார் செய்யும் அஞ்சலியெனப் பேராசிரியர்1 கூறுவர். இறைவனை நோக்கத் தாம் இறப்ப இழிந்தமை எண்ணி, திருநாவுக்கரசர் முதலிய சான்றோர் அச் சொல்லைத் தம்முடைய திருப்பாட்டுக்களில் எடுத்தாளு கின்றனர். இறைவனை நோக்க, அயனும் மாலும் முதலான தேவர் பலரும் இழிந்தவர் என்பது தோன்ற, "ஆத்தமாம் அயனும் மாலும் அன்றி மற்று ஒழிந்த தேவர், சோத்தம் எம்பெருமான் என்று தொழுது தோத்திரங்கள் சொல்ல"2என்று திருநாவுக்கரசர் கூறுகின்றார். கும்மலித்தல் என் னும் சொல் உடம்பு பூரித்தல் என்னும் பொருள்பட வருவ தாகும் ; நீரில் நனைந்த குருகினம், தம் இறகின் ஈரம் புலர வேண்டி இறகு நிமிர்த்துக் கும்மலிப்பது இயல்பு ; இதனை. நம்நாவரசர்,"படப்பையெல்லாம் .குருகினங்கள் கூடியாங்கே கும்மலித்து இறகுலர்த்தி, மருவலாம் இடங்கள்காட்டும்"3 என்பர். ஒப்புமை யாவதொன்றனை ஒப்பாரியென வழங்குவதுண்டு : மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாம் கண்டது இல்"4 எனத் திருவள்ளுவர் வழங்குவது காண்க. திருநாவுக்கரசர் அதனைத் தாமும் வியந்து, "ஒப்பாரி இலாத எம்மடலுளான்5 என்று ஓதுகின்றார்", இவ் வாறே, "நிவஞ்சகத் தகன்ற செம்மையீசன்"6 எனவும் "கள்ளையிற் பட்டு நக்கரைப்பிக்க"7 "' எனவும், "கண்ணிட்டுப் போயிற்று "8' எனவும், சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனப் பந்துவாக்கி யுயக்கொளும்"9' எனவும், " தீவினை நரிச்சிராது நடக்கும் நடக்குமே "10 எனவும், அருமந்தன்ன அதிர்கழல் சேர்மினே"11 என "அரியோடு பிரமனும் துத்தியம் செய நின்ற நற்சோதியே" 12 ______________________________

1. திருக்கோவை. 178. உரை. 
2. திருநா.  50 : 2,
3. திருநா.  55 : 8,
4. குறள்,   1071.
5.    ஷ    117: 1.
6. திருநா.   78 : 7. 
7.      ஷ   96 : 9,  
8       ஷ   98  : 2 : 
9.      ஷ.  185:9        1
10      ஷ.  199: 3. 
11.    .ஷ   211:21
12.     ஷ   214:2