பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:164

 எனவும் பிறவுமாக வருவன பலவும் அறிஞர்கண்டு இன்புறும் பான்மையவாகும்.

<bமுந்துநூல் வழக்குb/>

'"முன்னனோர் மொழிபொருளேயன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவம்" 1என்பது ஒரு பழமையான கொள்கையாகும். அது தமிழகத்துச் சான்றோர் எல்லாரிடத்தும் இயல்பாகக் காணக்கூடிய தொன்று. இலக்கணநூல் எழுதுவோரும் இலக்கிய மெழுதுவோரும் இப்பண்புடையராதலை எளிதிற்காணலாம். திருஞானசம் பந்தர், திருநாவுக்கரசர் முதலிய சான்றோர்கள் இறைவன் திருவருள் வழிநின்று தம் உளம் குளிர்ந்தபோதெல்லாம் அதன்கண் உவட்டெடுத்துப் பெருகிய உணர்ச்சி மொழியாக இத் திருப்பதிகங்களை யோதியுள்ளனர் ; ஆயினும், அவ்வுணர்வுப் பெருக்கிடையே அவர் கற்றனவும் கேட்டன வுமாகிய முந்துநூற் கருத்துக்களும் சொற்களும் பொன்னும் மணியும் போல வெளிப்படுகின்றன. "அகரமுதல: எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே யுலகு "2' என்பது திருக்குறள் ; இதனைத் திருநாவுக்கரசர், '"ஆனத்து முன் னெழுத்தாய் நின்றார்போலும்3" என்பர். இதன்கண் அகரமுதல் னகர இறுவாயாகிய எழுத்து அனைத்தையும் ஆனம் எனவழங்கியது திருநாவுக்கரசரது செஞ்சொற்றிறமாகும். '"இனிய வுளவாக இன்னத கூறல், கனியிருப்பக் காய்கவர்ந்தற்று"4 என்பது திருக்குறள். இதன் ஈற்றடியை வாங்கி, ஆரூரரைக், கையினால் தொழா தொழிந்து கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே"5என்பர். "புறந் தூய்மை நீரானமையும் அகந்தூய்மை வாய்மையாற். காணப்படும்"6 எனவரும் திருக்குறளை உளத்திற்கொண்டு, :வாய்மையே. துாய்மையாக மனமணி யிலிங்கமாக"7என்பர். ______________________________ 1. நன்னூற் பாயிரப் பகுதியில்

இஃது எடுத்துக் காட்டப்
படுகிறது. -

2. குறள். 1. 3. திருநா. 242 : 5. 4. குறள். 100. 5. ஷ 5 : 1 6. ஷ 238:7 7.. ஷ 76 : 4.