பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

167

திருநாவுக்கரசர்

 தெரிகிறது. இவ்வைந்திரம் இந்திரமெனவும் வரும். இவ் விலக்கணத்தையும், இந்திரனுக்கு இறைவன் அருளினன் என்பது போதர, நம் திருநாவுக்கரசர், " இந்திரத்தை இனிதாக ஈந்தார்போலும்"1என்று தெரித்தருளுகின்றார், இவ்வாறே ஆகமங்களின் வரலாற்றையும் அகத்தியன் வரலாற்றையும், திருநாவுக்கரசர், "அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை, அகத்தியனை உகப்பானை"2 என்று குறித்தருளுகின்றார். இவ்வாறு இறைவன் கலையும் கல்வியும் நல்கிய வள்ளன்மையைச் சான்றோர் எடுத்தோதக் கண்டே காமிகம் காரணம் முதலிய சிவாக மங்களைக் கற்பிக்கும். கல்விநிலையங்கட்குக் கோயிலி லேயே இடம் வகுக்கலாயினர் ; பின்வந்த தமிழ் நாட்டு வேந்தர்கள் இறைவன் திருக்கோயிலை பல்வகைக் கலைகட்கும் கல்விக்கும் சீர்த்த இடமாகச் செய்து வளர்த்தனர். இதனை அறியாத தன்னலவாதிகள் இந்நாளில் திருக்கோயில்கள் கல்வி நிலையமாதல் கூடாது எனப் பிணங்கிப் பேதைமை மொழிகின்றனர்.

<bதிருநாவுக்கரசரும் கல்வெட்டுக்களும்b>/

திருநாவுக்கரசருடைய திருப்பெயர், திருநாவுக்கரசு தேவர், திருநாவுக்கரசு நாயனார், திருநாவுக்கரசு முதலியார், திருநாவுக்கரையர், திரு நாவுடையபிள்ளை, நாவுடைப் பெருமான் எனப் பலவகையாகக் கல்வெட்டுக்களில் வழங்கப் பெற்றுளது. அவற்றுள், திருநாவுக்கரசு தேவர் என்பது பெருவழக்கு. ஏனைய சிறுபான்மையாக வழங்கின. கோவிலூரென வழங்கும் திருவுசாத்தானத்திலுள்ள கல்வெட்டொன்று3திருநாவுக்கரசரைத் திருநாவுக்கரசு நாயனாரெனக் குறிக்கின்றது. திருச்செந்தூர்க்கு அண்மை யிலுள்ள ஆற்றூரில் காணப்படும் கல்வெட்டொன்று4' அவரைத் திருநாவுக்கரசு முதலியார் என வழங்குகிறது. திருநாவுக்கரைய தேவர் என்னும் பெயரைத் தஞ்சைப்- ______________________________ I. திருநா. 212:8. 2. திருநா. 264:3. 3 A. R. No. 186 of 1908. 4 A. R. No. 456 of 1930.