பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:168

 பெரியகோயில்கல்வெட்டும்1 திருமழபாடிக் கல்வெட்டும்’2 பிறவும் கூறுகின்றன. தஞ்சை மாவட்டத்துச் சூலமங்கலத்தில் கோச்சடையவன்மரான பராக்கிரம பாண்டியன்காலத்துப்பத்தாமாண்டுக் கல்வெட்டொன்றும்3 பன்னிரண்டாம் ஆண்டுக் கல்வெட்டொன்றும்4 நாவரசரைத் திருநாவுடைய பிள்ளையாரென வழங்குகின்றன. திருவெண்காட்டிலுள்ள கல்வெட்டொன்று 5 தேவகன்மி நாவுடைப் பெருமான் திருவெண்காடு பட்டன்என ஒருவன்பெயரைக்குறித்தலால், திருநாவுக்கரசர்க்குத் திருநாவுடைப் பெருமான் என்றொருபெயரும் வழங்கி வந்ததென்று தெரிகின்றோம். -

இந்நாளில் பிராமணரிடையிலும் சிவப்பிராமணரிடையிலும் தம்மைத் தமிழ் மொழியினர் என்று கருதும் கருத்து இறந்து போயிற்று. அதனால், திருநாவுக்கரசருடைய பெயரைப் பிராமணமக்கட்கு இடும் மரபு மறைந்தொழிந்தது. இந்த மரபு இடைக்காலத்தில் நிலவினமையால் அது பெருக வழங்கியிருந்தது ; அதனைத் தஞ்சாவூர்ப் பெரிய கோயில் கல்வெட்டு 7எடுத்துக் காட்டி வற்புறுத்துகிறது. சிவப் பிராமணர் பலர், பொற் சுவரன் திருநாவுக்கரையனான தர்ம சிவன்8கம்பன்திருநாவுக்கரையனான சதா சிவன் அப்பி,திருநாவுக்கரையனான நேத்திர சிவன்,9 ஆரூரன் திருநாவுக்கரையனான ஞானசிவன்,10 மாதேவன் திரு நாவுக்கரையனானவிஞ்ஞான சிவன்,11 சத்திதிருநாவுக்கரை யனான ஈசான சிவன்,12 ஆச்சன் திருநாவுக்கரையனான நேத்திர சிவன்13எனத் திருநாவுக்கரைசர் திருப்பெயரைத்- _______________________________

1. S. I. I. Vol.II. partii. 
 No. 41. 
2. A. R. No. 37 of 1920.
3. திருப்புகலூர் A. R. 68 of 
 1928. திருவாரூர் A. R. No.137 
 1934. -
.4 A. R. No. 564 of 1921. 
 5. A. R. No. 294 of 1911.
 6 . S. I. I. Vol. V. No. 
 985. 
.7 S. I. I. Vol. II. part 
  iii. No. 65. 
 8. S. I. I. Vol. II. part 
  iii. No. 65.para 6
 9.  Ibid, para 7. 
10. Ibid. para 8. 
11. Ibid. para. 10.
12. Ibid. para.
13. 13. Ibid. para. 13.