பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

சைவ இலக்கிய வரலாறு

சக்ர கோலாகலன், அவனிபசேகரன் என்ற சிறப்புக்கள் பலவுண்டு. தெள்ளாறு, குடமூக்கு, அரிசிற்கரை என்ற இடங்களில் பல்லவரொடு பொருது இவன் பெரு வெற்றி எய்தினான்.

வரகுணவன்மன் I (கி.பி. 862-880) : இவன் சீவல்லபனுக்குப் புதல்வன்: திருப்புறம்பயப்போரில் தோல்வி யெய்திச் சோழநாட்டில் தான் வென்ற பகுதியைக் கைவிட்டு நீங்கினான்.[1]

சடையவன்மன் பராந்தக பாண்டியன் (கி.பி.880-900). இவன் இரண்டாம் வரகுணனுக்குத் தம்பி, சீவல்ல பனுக்கு இரண்டாம் புதல்வன். வரகுணன் மகப்பேறின்றி இறந்தமையின் இவன் அரசு கட்டிலேறினன். இவர்கள் காலத்தில் பாண்டியர் அரசு எல் லையிற் சுருங்கி விளக்கங் குன்றுவதாயிற்று. இவர்கட்குப் பின்வந்த மூன்றாம் இராசசிம்மன் முதலியோர் காலங்களில் இடைக்காலச் சோழ வேந்தரது ஆட்சி ஓங்கத் தலைப்பட்டது. மதுரைகொண்ட பரகேசரி யெனப் படும் முதற் பராந்தகசோழன் முதலியோர் விளக்கம் மிகுவாராயினர்.

பல்லவ பாண்டியர் காலத்துப் புத்தசமய நிலை

பல்லவர்கள் காலத்தில் தமிழ் நாட்டில் புத்த சமயமும் சைன சமயமும் பரவியிருந்தன. இவ்விரண்டினுள், புத்த சமயம், சமண் சமயமெனப்படும் சைனத்திற்கு முன்பே தென்னாட்டிற் பரவியதென்பது வரலாற்றுக் கொள்கை. கி. பி. நான்காம் நூற்றாண்டில் (கி. பி. 399-414) பாகியான் என்னும் சீனரொருவர் தென்னாட்டுக்கு வந்திருந்தார். அவர் ஆங்காங்கே தான் கண்டனவும் கேட்டனவுமாகிய வரலாற்றுச் செய்திகள் பல குறித்துள்ளார். அவர் குறிப்பின்படி, அக்காலத்தே தென்னாட்டில் வீறுகொண்டிருந்த அரசு பல்லவவரசெனக் கருதப்படுகிறது. அது கிருஷ்ணை, குண்டூர், நெல்லூர் மாவட்டங்களில் பரவியிருந்தது. அவர்


  1. T. V. S. பாண். வர. பக். 58.