பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநாவுக்கரசர்

181

சேந்திரன் காலத்திலும், தஞ்சாவூர்ப் பெரிய கோயிலிலும்[1] திருமழபாடியிலும்[2] முறையே பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனுன தென்னவன் மூவேந்த வேளானும், திருமால் அரங்கனை திருப்பள்ளித் தாமப்பிச்சன் என்பவனும் அவன் மனைவியும், வீர ராசேந்திரன் காலத்தில் அகத்திய கொண்டாவில் உத்தம சோழ கங்கனை செல்வகங்கன் மனைவியும்[3], திருவாரூர்க் கோயிலில் இரண்டாங் குலோத்துங்கனும்[4], திருவலஞ்சுழியில் இரண்டாம் இராசராசன் காலத்தில் தேவரடியார் ஆட் கொண்டான் தேசும் திருவும் உடையாளும், கிழக்கடைய நின்றாளும் ஆகிய இவ்விருவரும்[5], திருக்கச்சூரில் மூன்றாங் குலோத்துங்க சோழனும்[6], சூலமங்கலத்துக் கரி யுரித்த நாயனார் கோயிலில் சடையவன்மன் பராக்கிரம பாண்டியன் காலத்தில் திருநாவுடையார் என்பவரும்[7], இராமநாதபுர மாவட்டத்துத் திருப்புத்துார் உருத்திர கோட்டிச்சுரத்தில் அருவியூர் வாணிகன் புற்றிடங் கொண்டான் திருச்சிற்றம்பல முடையானை ஞானசம்பந்தன் என் பவனும்[8], திருநாவுக்கரசர் திருவுருவத்தை எழுந்தருள்வித்து நாட்பூசனை முதலிவற்றுக்கு வேண்டும் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

திருநாவுக்கரசர் பிறந்த ஊராகிய திருவாமூரிலும்[9]அவர் இறுதிக் காலத்தே இருந்து வழிபாடு செய்த

திருப்புகலூரிலும்[10] எழுந்தருளப் பெற்றிருந்த திருநாவுக்கரசர் திருவுருவ வழிபாட்டுக்கென, முதல் இராசராசன் காலத்திலும் முதற் குலோத்துங்கன் காலத்திலும் நிலங்கள் நிவந்தமாக விடப்பட்டுள்ளன. இவ்வாறே, திருப்புத்தூர்[11] கோவிலுரர் எனப்படும் திருவுசாத்தானம்[12] சூலமங்கலம்[13].


  1. S.I.I.Vol.II.Part ii.No.38 & 41.
  2. A.R.37 of 1920.
  3. A.R.559 of 1906.
  4. S.I.I.Vol.VII.No.485.
  5. S.I.I.Vol.VIII.No.228.
  6. A.R.316 of 1909.
  7. A.R.294 of 1911.
  8. A.R.300 of 1928.
  9. A.R.137 of
  10. А.R.68 of 1928.
  11. A.R.
  12. A.R.186 of 1908.
  13. A.R.