பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

173

திருநாவுக்கரசர்


கரசன் மடமெனவும்,1 பட்டீச்சுரத்தில் திருநாவுக்கரசு மட மெனவும்,2 திருப்பாசூரில் திருநாவுக்கரசன் மடமெனவும்3 கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவ்வாறே தில்லையிலும் திருப்பூந்துருத்தியிலும் திருநாவுக்கரசு பெயரால் திரு மடங்கள் இருந்திருக்கின்றன. வெனினும்,தில்லையிலிருந்தது இருந்தவிடம் தெரியாமல் மறைந்து போக, திருப்பூந் துருத்தியிலிருந்தது செவ்வாய்க்கிழமை மடமாக மாறி யிருக்கிறது. திருக்குறுக்கை வீரட்டேசுரர் கோயிலில் திரு. நாவுக்கரசு திருக்குகையென ஒரு மடம் இருந்ததென அவ்வூர்க் கல்வெட்டொன்று 4கூறுகிறது. பூதக்குடிச் செப்பேடு ஒன்று அங்கே திருநாவுக்கரசர் மடமொன்றிருந்ததெனத். தெரிவிக்கிறது. திங்களூர், புகலூர் ,திருநல்லூர் முதலிய இடங்களிலும் திருநாவுக்கரசர் திருமடங்கள் இருந்தன எனத் திருத்தொண்டர் புராணம் கூறுகிறது.

பிரான்மலையிலுள்ள மங்கைபாகர் திருக்கோயிலில் திருநாவுக்கரசர்பெயரால் திருநாவுக்கரசு திருமண்டபம் என ஒரு மண்டபம் இருந்திருக்கிறது. திருவதிகையில் பிடாரி' கோயிலின் வடக்கிலிருந்த காட்டையழித்துச் சாலியர், எண்ணெய் வாணிகர் முதலியோரைக் குடியேற்றி அத் தெருவுக்குத் திருநாவுக்கரசன் திருவீதி யெனப்பெயரிட்டு வழங்கினர். திருநாவுக்கரசர் பால் தமக்கிருந்த அன்பு மிகுதியால் தம்மக்கட்கு மூத்த திருநாவுக்கரசு இளைய திரு. காவுக்கரசு என்றும், தாம் நிறுவிய தண்ணீர்ப்பந்தல், தம் மனைக்கண் இருந்த அளவைகள் முதலியவற்றுக்குத் திரு நாவுக்கரசு என்றும் பெயரிட்டு அன்புசெய்தனர் அப்பூதி யடிகள் என்று திருத்தொண்டர் புராணம் கூறுகின்றமை முன்பே காட்டப்பட்டது. இவ்வாறே, திருவாவடுதுறையில் ஓர் அன்பர் தன்மக்கட்கு மூத்ததிருநாவுக்கரசு இளைய திருநாவுக்கரசு எனப் பெயரிட்டிருந்தனர். அவருள் இளைய திருநாவுக்கரையர் என்பார் திருவாவடுதுறைக் கற்றளிப் பிரானுக்கு அரிய திருப்பணி செய்தனர். அங்கே அவ- ______________________________

1. A. R. 80 of 1924,
2. A. R. 261 of 1927.
3. A. R. 127 of 1930. 
4. A. R. 219 of 1917.