பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:174


ருடைய திருவுருவத்தைச் செய்தமைத்து அதன்கீழ் 'இவ் ஆர்க்கற்றளிப்பிரானர்க்குத்தொண்டர் இளைய திருநாவுக் கரையர்' என்பது எழுதப்பட்டுள்ளது. பிரான்மலைப்பகுதி யில் திருநாவுக்கரசு நாழி என்று ஓர் அளவை வழங்கிவந்ததாகக் குலசேகர பாண்டியன் காலத்துக் கல்வெட்டொன்று கூறுகிறது. -

திருநாவுக்கரசரை வாகீசரென வழங்குவதுண்டென்று முன்பே கூறினோம். திருவதிகையில் இருந்த திருநாவுக் கரசர்மடம் வாகீசன் மடமென்று வழங்கிற்றென அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுகிறது. அப்பெயரும் தமிழ் மக்களால் நன்கு போற்றப்பட்டு வந்துளது. பலர் அப்பெயரைத் தமது இயற்பெயராகக் கொண்டுள்ளனர். திரு வாலங்காட்டில் மணலூருடையான் வாகீசன் என்று ஒருவரும், திருவாரூர் வடக்கில் மடத்து முதலியார் பிள்ளை வாகீசப்பெருமாள் என்று ஒருவரும், நொடியூரில் நொடி யூருடையான் சொக்கன் அரையங்குளவனை வாகீசப் பெருமாள் என்று ஒருவரும் இருந்திருப்பதைக் கல்வெட் டுக்கள் தெரிவிக்கின்றன. தஞ்சைமாவட்டத்துப் பெருஞ் சேரியில், மூன்றாங்குலோத்துங்கன் காலத்தில் அவ்வூரிலுள்ள சிவன் கோயிலைக் கற்றளியாக்கிய செய்தி கூறும் கல்வெட்டு அக்கோயிலைத் திருவாகீசுரம் என்று குறிக்கிறது. இது வாகீசனென்ற செல்வரொருவரால் கட்டப் பெற்றதாகவும் இருக்கலாம். திருவொற்றியூரிலிருந்த மட மொன்றிலிருந்து கொண்டு "சோம சித்தாந்தம் வக்காணித்த" "வாகீச பண்டிதரென ஒருவர் இருந்து ஞானாமிர்தம் என்னும் தமிழ் நூலைச் செய்துள்ளார். முதற் பராந்தகன் காலத்தில்தொண்டைமானாற்றூரில் வாகீசுரபண்டிதன் தூம்பு 4 என ஒரு தூம்பும் இருந்திருக்கிறது. மதுரைத் திருஞானசம்பந்தர் மடத்துத் தலைவர் திருஞானசம்பந்த பண்டாரம் என வழங்கியதுபோலப்- ______________________________

 1. A. R. 131 of 1925.
 2. S. I. I. Vol. VIII. No. 
    440.
 3. S.l I Vol. VIII. No. 324. 
 4. S. I.I, Vol.VIII.No. 529.