பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:178


அரசியலைத் தந்து விட்டுச் சிவப்பணி புரியத் தொடங் கினர். சிவபெருமான் கோயில் கொண்டிருக்கும் இடம் பல வற்றுக்கும் சென்று இறைவனை வழிபட்டு ஒவ்வோர் அழகிய வெண்பாவைப் பாடிப் பரவி வந்தார். இவ்வாறு வருபவர், தில்லைக்கு வந்து அங்கே திருக் கூத்தியற்றும் இறைவனை வணங்கி வெண்பாவொன்று பாடி இன்புற்றார். இவர் தில்லைக்கு வந்தபோது அங்கே சில நாள் தங்கினார். பின்னர், ஏனைத் திருக்கோயில்கட்கும் சென்று இறைவனைப் பணிந்து திருப்பணி செய்த காடவனார், நெடுநாள் உயிர் வாழ்ந்திருந்து இறைவன் திருவடி நீழலெய்தினர். இவ்வரலாறு, திருத்தொண்டர் புராணமும் பல்லவருடைய செப்பேடுகளும் துணையாகக் கொண்டு காணப்பட்டதாகும். வரலாற்றாராய்ச்சி - பரமேச்சுரன் என்பது இவரது இயற்பெயரெனக் காணப்படுகின்றது . எனினும், இவர் சிவத்தொண்டு செய்யும் "மாதவம்"1 பூண்டபின், அடிகள் எனப்பட்டனராதல் வேண்டும். அடிகளாகிய காலத்தில் அரசு புரிந்த வேந்தன் இவருடைய மகனை இரண்டாம் நரசிங்கவன் ஆதலால், அவனும் அவன் நாட்டு நன்மக்களும் இவரை ஐயரடிகள் என வழங்கினர். இடைக்கால வேந்தர்கள் தம் தந்தையை ஐயரென வழங்கியதனால் இவ்வுண்மை வலியுறுகிறது. சோழவேந்தனை வீர ராசேந்திரன் தன் தந்தையான இராசேந்திரனைப் "பூருவதேசமும் கங்கையும் கடாரமும் கொண்டருளின ஐயர்க்கு யாண்டு இருபத்து மூன்றாவது” 2என்றும், அழகிய பல்லவனை கோப் பெருஞ் சிங்கன் புதல்வன் அழகிய பல்லவன் வீரராயனை கச்சியராயன், கல்வெட்டொன்றில்3 தன் தந்தை கோப் பெருஞ்சிங்கனை," ஜயதேவர்" என்றும் குறிப்பன ஈண்டு நோக்கத் தக்கனவாம். ஆகவே, நரசிங்க வன்மனாலும் அவ- ______________________________

 1 பெரியபு. சத்தி: 7.
 2. S. I. I.Vol.IV. No. 529. 
 3. S. Í. í. Vol.XII No. 134.