பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

179

ஐயடிகள்காடவர்கோன்


னாட்டு நன் மக்களாலும் பரமேச்சுர வன்மனர் ஐயரடிகள் என வழங்கப் பெற்றார் என்பதும், அதுவே பின்பு ஐயடி கள் என வழங்கலாயிற்று என்பதும் தெளிவாம். இனி, இவரைக் காடவர்கோன் என நம்பியாரூரர் கூறினாராக, நம்பியாண்டார் நம்பி காடவர்கோன் என்னாது பல்லவன் என்றே கூறுதலால், பல்லவர்க்குக் காடவர் என்பதும் ஒரு பெயராதல் விளங்குகிறது. நம்பியாரூரர்க்கு முன்னே இருந்த தமிழ்ச் சான்றோர் எவரும் இலக்கியங்களில் பல்லவர்களைக் காடவர் என வழங்கியது கிடை யாது. காஞ்சிமா நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த பல்லவவேந்தருள், சிறப்புடைய முதன் மகேந்திர வன்மன், முதல் நரசிங்க வன்மன், இராச சிங்கன் முதலி யோர் பல சிறப்புப் பெயர் கொண்டுள்ளனர், அவற்றுள், காடவர் என்ற பெயரோ அதன் வடமொழிப் பெயர்ப்போ காணப்படவில்லே. பல்லவர்கள் தென்னாடு போதருமுன் காடு சூழ்ந்த நாடுகளில் வாழ்ந்திருந்தனர் என்னும் வர லாறு கொண்டு அவர்களைத் தமிழ்ச் சான்றோர் காடவர். எனவும், காடவர்கோன் எனவும் வழங்கினராதல் வேண்டும். ஆயினும், காடவரென முதன் முதலாகத் தமிழ் இலக் கியங்களில் வைத்துப் பாடிச் சிறப்பித்தவர் நம்பியாரூர ராதலின், அந்நலமுணர்ந்த பிற்காலப் பல்லவர்கள் தம்மைக் காடவர் என்றும், காடவர் குலத்தார் என்றும் கூறிக்கொண்டனர். காஞ்சிவைகுந்தப்பெருமாள் கோயில் கல்வெட்டுக்கள், நந்திவன்ம பல்லவ மல்லன் தந்தையான இரணிய வன்மனைக் "காடவேசகுல ஹிரண்ய வன்ம மகா ராஜர்"1' என்றும், அவையே நந்திவன்மனைக் குறிக்குங்கால் காடவகுலம் சிறக்கத் தோன்றிய சத்தியந்த சுபுத்திரன்' என்றும் குறிக்கின்றன. நிருபதுங்கனுடைய கல் வெட்டொன்று2 அவன் மனைவியைக் காடவன் மாதேவி யார் என்று கூறுகிறது. இனி, வடமொழிச் செப்பேடுகள் பலவும் பல்லவர்களைக் காடு வெட்டிகள் என்றே குறிக்- ______________________________

1. S. I. I. Vol. IV. No. 135. 
    A. R. No. 37 of 1888.
2. S.J. I. Vol. XII. No. 65.