பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:180



-கின்றன. கங்க வேந்தர்களான சீபுருஷன், சிவமாறன் முதலியோர் செப்பேடுகள்1 காஞ்சியைக் காடு வெட்டிகள் ஆண்டனரெனக் குறிக்கின்றன. சத்தியவேடு கல்வெட்டுக்கள்2 பல்லவர் கீழிருந்த தலைவர்களுள் இருவரைக் காடு வெட்டிப் பேரரையன் என்றும் காடுவெட்டித் தமிழ்ப் பேரரையன்என்றும் கூறுகின்றன நிருபதுங்கனுடைய பாகூர்ச் செப்பேடுகள், ஒரு தலைவனை, " விடேல் விடுகு காடுபட்டி தமிழ்ப் பேரரையன்"3 என்று செப்புகின்றன. காடு வெட்டி யெனவரும் குறிப்புக்களுள் மிகப் பழமையானது சிரகுண்டா கல்வெட்டிற்காணப்படுவது4எனவும், சிம்ம விஷ்ணுவின் சகோதரன் பீமவன்மன் வழி வந்தோரே காடவர் எனக் குறிக்கப்படுகின்றனர்5 எனவும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஐயடிகள் காடவர்கோன், "வெய்ய'கலியும் பகையும் மிகை யொழியும் வகை அடக்கி...அரசளிப்பார்"6 ' "பிற புலங்கள் அடிப்படுத்து."7 "அருமறையின் துறைவிளங்க அரசளிக்கும் அந்நாளில் ' வடநூல் தென்றமிழ் முதலாம் பன்னுகலைப் பணிசெய்யப் பாரளிப்பார்"8 என்று திருத் தொண்டர் புராணம் கூறுகிறது. இதன்கட் குறித்த "பகை யொழியும் வகை யடக்கிய திறம் சளுக்கி வேந்தனான விக்கிரமாதித்தனோடு போர் செய்து பெற்ற வெற்றியால் விளக்கமாகிறது. இதனை இக்காடவர் கோனுடைய கூரத்துச் செப்பேடுகள்9விரியக் கூறுகின்றன. இவர் கலி யொழியும் வகை யடக்கிய திறத்தைக் காசாக்குடிச் செப் பேடுகள்'10 இவர் பெயரனான இரண்டாம் பரமேச்சுரன்- _______________________________ 1. My. Arch. Reports. 1923.

52: 3. 1907, p. 3. Kondaji-I. 
Agrahara plates.

2. A. R. No. 31 & 32 of 1912. 3. Ep. Indi. Vol. XVIII.p. 11. 4. Ep. Car. Vol. VI. C. M. 50. 5.Introduction to SII.Vol.

XII. p. viii. 

6. ஐயடிகள். புரா : 1. 7. Ibid 2. 8. Ibid. 3. 9. S. I. I. Vol. I. No. 151.

  g., fi : 19-49.

10. S. I. Í. Vol. II, part

 iii. No. 78. argeor.24 & 26.