பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

181

ஐயடிகள்காடவர்கோன்


மேல் ஏற்றிக் கூறுகின்றன; ஆயினும், அவை இவர் ஏனைமன்னர் எல்லாரையும் வென்று பிறபுலங்கள் அடிப்படுத்து'மேன்மையுற்றதை வற்புறுத்துகின்றன. வேளுர்ப்பாளையம் செப்பேடுகள்,1இவர் பகைவர் செய்த சூழ்ச்சிகளைக் கடிந்து சளுக்கர் சேனையாகிய இருட்கு ஞாயிறு போல் திகழ்ந்தார் என்று தெரிவிக்கின்றன. கூரமென்னும் ஊர்க்குப் பரமேச்சுரமங்கலம் எனப் பெயரிட்டுச் சதுர்வேதிகட்குக் கூறு செய்தளித்த செயல்,2 ஐயடிகள் "அருமறையின் துறைவிளங்க " அரசளித்தாரென்பதை வற்புறுத்துகிறது."கலை பலவும் பணி செய்யப் பாரளித்தார்" எனச் சேக்கிழார் கூறுவதற்கேற்பத் தன் கலைகளாற் சிறக்கும் திங்களைப் போல இவரும் கலைத் துறைகளால் நிறைந்தவர்'3 என்று கூரத்துச் செப்பேடுகள் கூறுகின்றன. இவ்வாற்றால், செப்பேடுகளால் சிறப்பிக்கப்பெறும் முதற் பரமேச்சுரவன்மனும், திருத் தொண்டர் புராணம் கூறும் ஐயடிகள் காடவர்கோனும் ஒருவரேயாதல் தெளிவாம். - - இனி, கலியொழியும் வகை யடக்கிய இவர் செயலே இவர் பெயரன் இரண்டாம் பரமேஸ்வரன் மேல் ஏற்றிக் கூறுவதும், இவர், நெற்றிக் கண்ணால் மேம்படும் சிவன் போலத் தன் காட்சி நலத்தால் மேம்பட்டவரெனக் கூறும் கூரத்துச் செப்பேடுகட்கு வேறாக, உதயேந்திரம் செப்பேடுகள் அச்சிறப்பை இரண்டாம் பரமேச்சுரனுக்கு ஏற்றி உரைப்பதும் உண்டு.4 இவ்வாறு ஒருவர்க்குரிய சில சிறப்புக்கள் வேறொருவர்க்குரியனவாகக் கூறுவது இச் செப்பேடுகட்கு இயல்பாதலின், இச்சிறு வேறுபாடு பற்றி மயங்குதல் கூடாது. இனி, செப்பேடுகள் பலவும் கலிகடிந்தவன் என்றும், "பத்திமான்" என்றும், மனுமுறை வழாது ஆட்சி புரிந்த- ______________________________ 1. S. I. I. Vol. II. part v.

  No. 98.

2. S. I. I. Vol. I. No. 151. 3. S.I. I. Vol. I. No. 151. ' 4. S. I. I. Vol. II. part iii. No. 74.