பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

சைவ இலக்கியவரலாறு

 வன்' என்றும் இரண்டாம் பரமேச்சுரனைக் கூறுதலின், அவனே ஐயடிகளாகலாமே எனின், அவன் நம்பி யாரூரர்க்குக் காலத்தாற் பிற்பட்டவனாதலின், அவ்வாறு கோடல் பொருந்தாது என அறிக.

இனி, இவரது காலம் ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதி யாகும். நம்பியாரூரர் திருத்தொண்டத் தொகையில் இவரைப் பாராட்டிக் கூறுதலால், அவர் காலத்துப் பல்லவ வேந்தனான இரண்டாம் நரசிங்க வன்மனுக்குக் காலத்தால் முற்பட்டவர் ஐயடிகள் என்பது துணிவாம். மகேந்திர வன்மனால் கட்டப்பெற்ற சிராமலைக் கோயிலை இவர் பாடுதலால், அவன் காலத்துக்குப் பிற்பட்டவரென்பது தேற்றம். மகேந்திரவன்மனுக்கும் நரசிங்க வன்மனுக்கும் இடையே முதல் நரசிங்கவன்மன், இரண்டாம் மகேந்திர வன்மன், முதற் பரமேச்சுர வன்மன் என்ற வேஙந்தர் மூவர் இருந்திருந்தனர். இவருள் முதல் நரசிங்கவன்மன் ஏழாம் நூற்றாண்டின் இடையில் இருந் தவனாதலின், முதற் பரமேச்சுரனை ஐயடிகள் காடவர் கோனது காலம் ஏழாம் நூற்றண்டின் இறுதியாமென்பது துணியப்படுகிறது. பதினோராந் திருமுறையில், நம்பியாரூரர் காலத்தவரான சேரமான் பெருமாள் நாயனர் நூல்களுக்கு முன்னே ஐயடிகள் காடவர்கோனது க்ஷேத்திரத் திருவெண்பா வென்னும் நூல் வைக்கப்பெற் றிருக்கும் முறையும் இக்கால வரையறைக்கு ஒராற்றால் சான்றாவது ஈண்டுக் கருதத்தக்கது. நூலாராய்ச்சி ஐயடிகள் காடவர்கோன் செய்ததாக க்ஷேத்திரத் திரு வெண்பா ஒன்று தான் கிடைத்துள்ளது. இதன்கண் இரு பத்து நான்கு திருவெண்பாக்களும், அவற்றுள்ளே இருபத்து இரண்டு திருப்பதிகளும் காணப்படுகின்றன. அத் திருப்பதிகள், இருபத்து இரண்டுமாவன : திருச்சிற்றம் பலம், திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம், திருவையாறு, திரு- _________________________ 1. S. I. I. Vol. II. part v.

  No. 98, agar. 14.