பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:186

186 சைவ இலக்கிய வரலாறு

ஆயினும், திருக்கடவூர் மயானமொன்றே திருமயான மெனவும், அங்குள்ள இறைவன் திருமயானப் பெருமான் எனவும் தனிப்படக்1 கூறப்படுதலின், அடிகள் திருமயானம் எனக் குறிப்பது திருக்கடவூர் திருமயானமாகக் கருதுதற்கு இடந்தருகிறது.

ஐயடிகள் பாடியருளிய திருவெண்பா இருபத்துநான் கனுள் திருப்பதிகளைக் குறிக்காமல் பொதுப்பட நிற்கும் வெண்பா இரண்டும் அரசியற் செல்வத்தின் சிறுமையினையே எடுத்தோதுவது காணுமிடத்து, அவை, அரசியலைத் தம் மகற்கு அளித்த காலத்து அவர் பாடியன எனவும், ஏனைய, அவர் பற்பல திருப்பதிகட்கும் சென்று இறைவனை வழி பட்டு ஏற்ற திருப்பணிகளைச் செய்தபோது பாடியன எனவும் தெரிகின்றன. இவ்விருவகைக் கருத்துக்களை யுடைய பாட்டுக்களையும் ஒருசேரத்தொகுத்து க்ஷேத்திரத் திருவெண்பா எனப் பெயரிட்டுப் பதினனோராந்திருமுறையுள் ஒன்றாகப் பிற்காலச் சான்றோர் தொகுத்துள்ளனர் என்பது புலனாகிறது. மேலும், திருப்பதிகளைப்பாடும் ஒவ் வொருவெண்பாவும் சாதற்காலத்துத் துன்பத்தையே பன்னிப்பன்னி பேசுதலின், அடிகள், அரசியலில் உவர்ப்பும் முதுமை வரவுகண்டு அச்சமும் மிகக்கொண்டு அரசியலைத் துறந்து திருப்பதிதோறும் செல்லும் நிலையில் இவற்றைப் பாடினர் என்பது தேற்றமாம். இவ்வாறு திருக்கோயிற் பணியாலும் க்ஷேத்திரத் திரு வெண்பாப் பாடிய செந்தமிழ்த் திருப்பணியாலும் சிறப் புற்றதோடு, நம்பியாரூரரால் திருத்தொண்டத்தொகையில் திருத்தொண்டருள் ஒருவராக வைத்துச் சிறப்பித்துப் பாடும் பேறுபெற்றது கண்ட பிற்காலத்து நன்மக்கள், ஐயடிகள் என்ற பெயரை மக்கட்கு இட்டுவழங்கினர். முதல் இராசராசன்மகனை முதல்இராசேந்திரனுடையகல்வெட்டுக்களுள், திருக்கண்டியூர்க் கல்வெட்டொன்று திருக்கண்டியூர்2 லகுளீஸ்வர பண்டிதர் மடத்திற் பயிலும் மாணாக்கன் ஒருவனே, "சிவப்பிராமணன் பாரத்து வாசி ஐயடிகள் ஐயாறன்" என்று குறிக்கின்றது. . ______________________________

1. A. R. No. 259 of 1925.
2. S. I. I. Vol. V. No. 578.