பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நம்பியாரூரர்


வரலாறு

தென்னார்க்காடு மாவட்டத்தில், திருக்கோவலூர் வழியாகச் சென்று, திருப்பாதிரிப்புலியூருக்கு வடக்கில் கடலொடு கலக்கும் தென் பெண்ணையாறு, திருக்கோவலூர்க்குக் கிழக்கிலிருந்து கடலொடுகலக்குங் காறும் பரந்தவெளியில் பாய்கிறது. அதன் வளவிய நீரைப் பெற்று நலஞ்சிறக்கும் நாடு பண்டைநாளில் திருமுனைப்பாடி நாடு என வழங்கிற்று. இதுதொண்டைநாட்டுக்கும் சோழநாட்டுக்கும். இடையிலுள்ளமைபற்றி நடுநாடெனவும் கூறப்படும். இந் நாட்டில் பெண்ணையாற்றின் தென்பகுதியில் திருநாவலூரில் சடையனாரென்னும் சிவப்பிராமணருக்கும், இசை ஞானியாரென்னும் அவர் மனைவியாருக்கும் பிறந்தவர் நம்பி ஆரூரர். அந்நாளில் அப்பகுதியை நரசிங்க முனையரையர் என்னும் தலைவர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் நம்பியாரூரருடைய வனப்பைக் கண்டு ஆர்வமிகுதியால் தனது பெருமனையில் வளர்த்துவந்தார். ஆரூரர், நிரம்பிய கல்விகற்றுத் திருமணம் செய்து கொள்ளற்கு உரிய செவ்வியெய்தியபோது, அந்நாட்டைச் சேர்ந்த புத்தூர் என்னும் ஊரில்வாழ்ந்த சடங்கவி என்னும் சிவப்பிராமணருடைய மகளைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். திருமணம் புத்துாரில் நடைபெற்றது. திருமணச்சடங்குகள் நடந்துகொண்டிருக்கையில் முதிய வேதியரொருவர் தோன்றி மணமகன் தனக்கு அடிமை என்றும், தனக்குப் பணிசெய்வது அவரது கடமை என்றும் திருமணத்திற்.கூடியிருந்த சான்றோர் முன் வழக்கிட்டார்; திருமணமும் சிதைவுற்றது. அங்கிருந்த சான்றோர் நடுநின்று உரைத்ததற்கேற்ப, மணமகனும் வழக்கிட்டவேதியரும் பிறரும் வழக்குத் தொடுத்த அந்த முதுவேதியர் இருக்கும் திருவெண்ணெய் நல்லூருக்குச் சென்றனர். அங்கே கூடிய பேரவையில், அவ்வேதியர், நம்பியாரூரரும் அவருடைய முன்னோ-.