பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:190

 நம்பியாரூரர் இறைவனை வேண்டி அவரது அருட்டுணை யால் பரவையாரைப் பலரும் அறியத் திருமணம் செய்து கொண்டு இனிதிருந்தார். -

ஒருநாள் அவர் இறைவனை வழிபடச் சென்றபோது தேவாசிரியன் என்னும் மண்டபத்தில் சிவனடியார் சிலர் இருக்கக்கண்டு இவர்கட்கு அடியனாதல் வேண்டும் என விழைந்து இறைவனை வேண்டினர்; இறைவன் அடியவர் களின் வரலாறுகளை அவருள்ளத்தே தோற்றுவித்துத் "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடியெடுத்துத் தந்தருளினர்; அதுவே முதலாகக்கொண்டு ஆரூரர் திருத்தொண்டத்தொகை1 யென்னும் திருப்பதிகத்தைப் பாடித் தம் வேட்கையை நிறைவு செய்துகொண்டார். திருவாரூர்க்கு அருகில் குண்டையூரில் வாழ்ந்த செல்வ ரொருவர், நம்பியாரூரர்க்கு நெல்லும் பிறபொருள்களும் உதவி வந்தார். ஒருகால் மழையில்லாமையால், ஆரூரர்க்கு உதவுவதற்கென நெல்முட்டுப்படுவது கண்டு அச்செல்வர் வருந்தினர். அன்றிரவே, அவர் இருந்த ஊரில் நெல் மலை போல் குவிந்து விட்டது. அதனை அவர் நம்பியாரூரர்க்குத் தெரிவிப்ப அவர், "நீளநினைந்து அடியேன்”2 என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடிச் சிவபெருமானை இறைஞ்சினர். இரவில், அந்நெல் முற்றும் திருவாரூர்த் தெருவில் அவரவர் வீட்டெதிரே குவிக்கப் பெற்றது. அதனை அறிந்ததும், ஆரூரர் அவரவர் வீட்டருகே யிருந்த நெற் குவையை அவரவரே பெறுக எனத் தெரிவித்தருளினர். பின்பு ஒருகால் திருநாட்டியத்தான்குடியில்வாழ்ந்த கோட்புலியார் என்னும் தலைவர், நம்பியாரூரரைத் தமது ஊர்க்கு அழைத்துச் சென்று தம்முடைய மக்களாகிய சிங்கடி, வனப்பகை என்ற மகளிர் இருவரையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஆரூரரை வேண்டினர். நம்பி யாரூரர் அவ்விரு பெண்களையும் தம்முடைய மக்களாகவும் தம்மை அவர்கட்குத் தந்தையாகவும் கூறிச் சிறப்பித்தார். ______________________________ 1. சுந், தே. 39. 2. ஷ. 20.