பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாரூரர்

193

திருக்குருகாவூர்க்குச் செல்லும் கருத்தினரானார். வழிச் செலவால் அவர்க்கும் உடன்போங்த அடியார்க்கும் பசியும் நீர் வேட்கையும் தோன்றிப் பெருகிவருத்தின. குருகாவூர்க் கருகில் இறைவன் ஒரு குளிர்ந்த பந்தரிட்டு அதன் அயலில் பொதிசோறும் தண்ணீரும் அமைத்திருந்தார். ஆரூரர் அது கண்டதும் பந்தரின் கீழேயிருந்து அங்கிருந்த வேதியர் தந்த பொதிசோற்றையுண்டு தண்ணீர் அருந்தி அயர்ச்சி போக்கிக் கொள்ளச் சிறிது கண்ணயந்தார். விழித்தெழுந்து பார்க்கையில் அங்கே பந்தரும் இல்லை; 'சோறு நல்கிய வேதியரும் இல்லை. ஆகவே, நம்பியாரூரர் தமக்கு வழியில் தோன்றிப் பொதிசோறு தந்தவர் இறைவன். எனவே தெளிந்து குருகாவூர்ப்பெருமானே' "இத்தனை யாமாற்றை "[1] எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடிப் பரவிக் கொண்டு திருவாரூர் வந்து சேர்ந்தார்.

சின்னாட்குப்பின் நம்பியாரூரர் தொண்டை நாட்டுத் திருப்பதிகளைக் கண்டு வணங்கும் விருப்பமுற்றுத் திருக்கழுக்குன்றம் சென்று பரவிக் கொண்டு திருக்கச்சூர் சென்று அடைந்தார். அங்கே அவர்க்கு இறைவன் அருளால் வேதியர் ஒருவர்சோறு இரந்துவந்து கொடுத்துப்பசி தீர்த்தார். திருவருட்பாங்கை உய்த்துணர்ந்து "முதுவா யோரி”[2] எனத் தொடங்கும் திருப்பதிகத்தை மனமுருகிப் பாடி வணங்கினார். அதன்பின் திருவேகம்பத்தைப் பணிந்து கொண்டு திருக்காளத்திக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே இருந்தபடியே சீபருப்பதம் திருக்கேதாரம் முதலிய திருப்பதிகளைப் பண்கனியும் பாடல்களாற் பாடிப் பரவி விட்டுத் திருவொற்றியூரைச் சென்றடைந்தார்.

திருவொற்றியூரில் இருந்து கொண்டு இறைவனுக்குத் திருமாலைத் திருப்பணி செய்து கொண்டிருந்த சங்கிலியார் என்னும் நங்கையாரைக் கண்டு திருமணம் செய்து கொள்ளவிருப்பமுற்று ஒற்றியூர் இறைவன்பால்வேண்டிக் கொண்டார். இறைவன் சங்கிலியார் கனவில் தோன்றி நம்பியாரூரர் வேட்கையைத் தெரிவித்து அவரை மணந்து


  1. 1. சுந். தே. 29.
  2. 2. சுந். தே.41.

SIV–ł3