பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

சைவ இலக்கிய வரலாறு


இச் செய்தியறிந்த பரவையார், நம்பியாரூரை வரவேற் றற்குப் பிணங்குவாராயினர். ஆளுனருடைய முயற்சிகள் பயன்தாராவாயின. அவர் இறைவன்பால் முறையிடவும் அவையார் இறைவனருளால் சினந்தணிந்து அவரை வர வேற்றார், ஆரூரர் அவர்மனையில் பண்டுபோல் இருந்து வந்தார்.

இஃது இவ்வண்ணமாக, பெருமங்கலம் என்னும் ஊரில் வாழ்ந்த ஏயர்கோன் கலிக்காமர் என்பார், நம்பியாரூரர், இறைவனைப் பரவையார்பால் தூது செல்ல விடுத்தாள் என்பது கேட்டு, ஆறாச்சினமும் அருவருப்பும் கொண்டார். அவர்க்குச் சூலைநோய் உண்டாயிற்று. இருத்திக்கொண்டிருக்கும் அவரது கனவில், இறைவன் தோன்றி, இந்நோய் நம்பியாரூரர் வந்தால் நீங்கும்; அவரும் வருவார் " என்றார், விழித்து எழுந்த ஏயர்கோன், நம்பியாரூரர் வந்து காண்பதன்முன் உயிர் விடுதல் தக்கது என நினைத்துத் தம் உடைவாளால் வயிற்றைக் கீறிக்கொண்டு உயிரொடுங்கினுள் ஆவர். மனைவியார். தாமும் உடன் கட்டையேறற்கு வேண்டும் ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். அப்போது நம்பியாரூரரும் அவ்வூர்வந்து சேர்ந்தார். அவருடைய மனைவியார் நிகழ்ந்தது ஒன்றும் வெளியே தெரியாதவாறு மறைத்து. ஆரூரரை நன்கு வரவேற்குமாறு ஏவலரைப்பணித்து விட்டுத் தாம் கணவன் உடற்குப் பக்கத்தேயிருந்தார். மனைக்குள் வந்த நம்பியாரூரன் செய்தி முற்றும் அருகிருந்தாரை உசாவியறிந்து: தாமும் உயிர்துறக்க முற்பட்டனர். அப்போது கலிக்காமர் உயிர்பெற்றெழுந்து நம்பியாரூரர் கைகளைப் பற்றிக் கொண்டார். இருவரும் அன்பால் ஒருவர் ஒருவரைத் தழுவிக் கொண்டு இறைவன் திருவருளை வியந்துபாராட்டினார். பின்பு, ஆரூரன், கலிக்காமருடன் திருப்புன்கூருக்குச் சென்று இறைவனைப் பதிகம்பாடிப் பரவிக்கொண்டு திருவாரூர் வந்து சேர்ந்தார். அங்கே, இறைவனப் பணிந்த பின்னர்க்கலிக்காமர் ஆரூரர்பால்விடைபெற்றுக்கொண்டு பெருமங்கலம் சென்றார்.

சிலநாட்கள் சென்றன. நம்பியாரூரர் திருநாகைக்