பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாரூரர்

197

காரோணம் சென்று இறைவனைப்பாடிப் பொன், மணி, ஆடை, சாந்தம் முதலிய சிறப்புக்களைப் பெற்று வந்தார்.

இவ்வாறு இருக்கையில், சேரநாட்டு வேந்தரான சேரமான் பெருமாள் என்பார், இறைவன் அருளால் நம்பியாரூரர் வாழ்ந்து வரும் திறம் அறிந்து அவரைக் காண்பதற்குத் திருவாரூர்வந்தார். நம்பியாரூரர் அவரை ஆர்வமுடன் வரவேற்று அன்பு செய்தார். அதனல் அவர்க்குச் சேரமான் தோழர் என்ற சிறப்புப் பெயர் உண்டாயிற்று.

சின்னாட்குப்பின், ஆரூரரும் சேரமானும் பாண்டிநாடு சென்று, அந்நாட்டுத் திருக்கோயில்கள் பலவற்றை வணங்கி வழிபட்டுக்கொண்டு மதுரை நகரை அடைந்தனர். அங்கே பாண்டிவேந்தனும் அவன் மகளை மணந்து அங்கே இருந்த சோழவேந்தனும் இருவரையும் வரவேற்றுப் பேரன்பு செலுத்தினார். மூவேந்தருடன் நம்பியாரூரர் திருவாலவாய் இறைவனைப் பணிந்து பரவித் திருப்பதிகம்பாடிச் சிறப்பித்துச் சிலநாட்கள் தங்கினார். பின்பு அவர் திருப்பூவணம் தொழப் புறப்படலும், மூவேந்தரும் உடன் வந்தனர். பூவேந்தர் சூழ்வரச் சென்று பூவணத் திறைவனைப்பாடிப் பரவிய நம்பியாரூரர், மதுரைக்கு மீளவந்து, திருவாப்பனூர், திருவேடகம் முதலிய திருப்பதிகட்கு அவர்களுடனே சென்று பரவினர். அதன்மேல், திருப்பரங்குன்றம் சென்று மூவேந்தர் முன்னே இறைவனுக்குத் தொண்டு படுந்திறத்தை இனிய பதிகமொன்றாற் பாடிக்காட்டினார்.

பின்பு, பாண்டிவேந்தர் சோழர் பெருமான் என்ற இரு வேந்தர் பாலும் விடைபெற்றுக்கொண்டு, சேரமான் உடன் வர, ஆரூரர், திருக்குற்றாலம் திருநெல்வேலி முதலிய தென் பாண்டித் திருப்பதிகளைத் தொழுது கொண்டு திரு விராமேச்சுரம் சென்றார். அங்கிருந்தவாறே, ஈழநாட்டு மாதோட்டத் திருக்கேதீச்சரத்தை அரிய திருப்பதிகம் பாடிப்பரவி விட்டுத் திருச்சுழியல் வந்தடைந்தார். சுழியற் பெருமான் திருமுன் வணங்கி வழிபட்ட நம்பிகட்குத் திருக்கானப்பேர்க்குச் செல்ல வேண்டுமென்ற ஒரு திருவருட்-குறிப்புண்டாயிற்று. ஆகவே, அவர் திருக்கானப்