பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாட்டு வரலாறு

11

பல்லவர் காலத்தில் தமிழகத்து வந்த ஹியூன்சாங் என்பவர் எழுதியுள்ள குறிப்புக்களுள் சில காஞ்சி மாநகரைப் பற்றியுள்ளன; “காஞ்சியைச் சுற்றியுள்ள நாடு திராவிடநாடு எனப்படும்; நிலம் மிக்க வளஞ்சிறந்து பெரும் பொருளை விளைவிக்கின்றது: நாடு மிக்க வெப்பமாயிருப்பினும், நாட்டில் வாழ்பவர் மனவலியுடையராவர்; உண்மையொழுக்கங்களில் கடைப்பிடியும் கல்வி கேள்வி களாற் சிறக்கும் புகழும் உடையவர்; இந்நாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட சங்காராமங்கள் உள்ளன; பத்தாயிரவருக்கு மேற்பட்ட குருமார்கள் தேரவாத நூல்களைப் பயில்கின்றனர். சைனருள்ளிட்ட ஏனையோர் கோயில்கள் எண்பதுக்குக் குறையாமல் உள்ளன. சில பகுதிகளில் திகம்பர சைனத்தைப் பின்பற்றுவோர் பலர் இருக்கின்றனர். ததாகதர் (புத்தர்) தாம் வாழ்ந்த அந்நாளில் இப்பகுதிக்கு அடிக்கடி வந்து போவரென்றும், அவர் உரைத்த அறவுரையால் பலர் புத்தர்களாயினரென்றும் கூறுகின்றன்ர். புத்த மன்னனான அசோகனும் இக்காஞ்சிமா நகரைச் சூழ்ந்த பகுதியில் தன்னுடைய அறங்கூறும் தூண்களை நிறுவினன் என்றும் சொல்லுகின்றார்கள். அவற்றுள் பல இப்போதும் உள்ளன. நாலந்தா பல்கலைக் கழகத்தில் தலைமைப் புலமை நடாத்திய சீலபத்திரருக்கு முன்னோனாகிய தருமபாலன் பிறந்த ஊர் இக்காஞ்சியம் பதியே. பாண்டிநாட்டில் சிலர் புத்தனோதிய அறங்களை மேற்கொண்டொழுகுகின்றனர். ஆயினும், பலர், வாணிகத் துறையில் பேரார்வத்தோடும் விருவிருப்போடும் உழைத்துப் பொருளிட்டுவதில் கண்ணும் கருத்துமாயுள்ளனர். பாண்டி நாடு முழுதும் புத்த சயித்தியங்கள் உள்ளன வெனினும், புத்ததருமம் அருகி வருகிறது”[1] என்று கூறுகின்றன. ஹியூன்சாங் குறிப்புக்களே, “காஞ்சிக்கருகில் நூறடிக்கு மேற்பட்ட உயரமுடைய அசோக மரங்கள் கிறைந்த (சங்க) ஆராமம் ஒன்று உளது; இங்கே தான் புத்தர் திர்த்தங்கரர்களைச் சொற்போரில் வென்று


  1. 1. Be{l Records, Vol. II. page. 228-30.