பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாரூரர்

201

வந்து தடுத்தாட்கொண்ட செயலே, "வாயாடி மாமறை யோதி ஒர் வேதியனாகி வந்து ... வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளுங்கொண்ட நாயாடியார்"[1] எனக் குறித்தருளுகின்றார் ஆட்கொள்ளப்பட்ட காலத்திலே தமக்கு வன்றென்டன் என்ற சிறப்புண்டாயிற்று என்பதை, "தன்மையினால் அடியேனத் தாம் ஆட்கொண்ட நாள் சவைமுன் வன்மைகள் பேசிட வன்றென்டன் என்பதோர் வாழ்வு தந்தார்."[2] என நம்பியாரூரர் நவிலுகின்றார். வன்றெண்டரான நம்பியாரூரர் திருவதிகைக்கு அருகில் சித்தவட ம ட த் தி ல் தங்கியிருக்கையில் இறைவன் திருவடி தீக்கை பெற்ற செயலைக், "கறைக் கொண்ட கண்டத்து எம்மான் தன் அடிக்கொண்டு என் முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்”[3] என்றும், அப்போது, தாம், இறைவனே இகழ்ந்தது குறித்து வருந்தி, " எறிகெடில வடவீரட்டானத்து உறைவானே இறைபோதும் இகழ்வன் போல் யானே" என்றும் குறித்துள்ளார். திருவாரூரை அடைந்து வழிபட்டிருக்கையில் இறைவன் தன்னை நம்பியாரூரர்க்குத் தோழ கைத் தந்தமையின், தம்பிரானகிய இறைவற்குத் தாம் தோழனாகிய குறிப்பை, "அடியேற்கு எளிவந்த தூதனைத் தன்னைத் தோழமையருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனே"[4] என்று காட்டுவர் ; இக் குறிப்புக்குள்ளே பரவையார்பால் தனக்காக இறைவன் தூது சென்ற குறிப்பும் உளது. பரவையாரைத் தான் மணந்து கொண்ட குறிப்பு, "மாழை யொனகண் பரவையைத் தந்தாண்டானே"[5] என்பதிலும், சங்கிலியாரை மணந்து கொண்ட குறிப்பு, "சங்கிலியோடு எனப் புணர்த்த தத்துவனை[6] " என்பதிலும் . இனிது விளங்கப் பாடியுள்ளார்.

இவ்வாறே குண்டையூரில் நெல் பெற்ற நிகழ்ச்சியும்,


  1. 1. சுங் தே. 17 : 8.
  2. 2. சுக். தே. 17 : 2.
  3. 3. ௸ 38:1
  4. 4.௸ 68:8
  5. 5. ௸ 51:10
  6. 6. ௸ 51:11