பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாரூரர்

203


நம்பியாரூரது காலம்

நம்பியாரூரர் பாடியருளிய திருப்பதிகங்களுள், "மண்ணுலகம் காவல்பூண்ட உரிமையால் பல்லவர்க்குத் திறை கொடா மன்னவரை மறுக்கம் செய்யும் பெருமையார்"[1] எனவரும் திருப்பாட்டில் குறிக்கப்படும் பல்லவ மன்னன் தந்தி வன்மன்; அவனே திறைகொடா மன்னவரை உடையணுயிருந்தான் என்றும், அவன் காலம் கி. பி. 780-க்கும் 830-க்கும் இடைப்பட்ட காலம் என்றும், எனவே அவன் காலத்தவரான நம்பியாரூரர் காலம் எட்டாம் நூற்றாண்டாக வேண்டும் என்றும் திரு. M. S. பூரணலிங்கம் பிள்ளையவர்கள்"[2] கூறுவர். அவர்க்குப் பின் திரு. கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள், நம்பியாரூரர் திருத்தொண்டத் தொகையில், கடல் சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற கோமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்"[3] என்றவிடத்துக் காடவர்கோன் கழற்சிங்கன் என்றது இரண்டாம் நரசிம்ம வன்மனையே குறிக்கும். என்றும், தம்பால் பேரன்புடையராகிய கழற்சிங்கர் பொருட்டு இறைவன் திறைகொடா மன்னவரைத் திறை

கொடுக்குமாறு செய்திருப்பர் என்றும், “ சிங்கம் என்பது நரசிங்கம் என்னும் சொல்லின் முதற் குறையாகும்" என்றும், நரசிங்க முனையரையர் திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட சிற்றரசராய் இருக்கலாம் என்றும், எனவே நம்பியாரூரர் எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர் என்றும் [4]கூறுகின்றார். இனி, திரு. சதாசிவப் பண்டாரத்தாரவர்கள், இரண்டாம் நரசிங்க வன்மன் காலமே நம்பியாரூரர் காலமென்றும், நம்பியாரூரரை இளமையில் வளர்த்த நரசிங்க முனையரையர் இரண்டாம் நரசிங்க வன் மன் கீழிருந்த குறுநிலத் தலைவர் என்றும், கழற்சிங்கன் என நம்பியாரூரர் குறிப்பது இரண்டாம் நரசிங்க வன்


  1. 1. சுங், தே. 90 : 4.
  2. 2. Tamil Literature. p. 177 : 8.
  3. 3. சுங். தே. 39 : 9.
  4. 4. இலக்கிய வரலாறு. பக். 337-40.