பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

சைவ இலக்கிய வரலாறு


வாழ்வு வேண்டி நான் விரும்புகில்லேன் [1]' என்றும், தன் நெஞ்சினைத் தெருட்டும் வாய்பாட்டில் வைத்து, "பதியும் சுற்றமும் பெற்ற மக்களும் பண்டை யாரலர் பெண்டிரும், நிதியும் இம்மனைவாழும் வாழ்க்கையும் நினைப்பொழி, மட நெஞ்சமே"[2] என்றும் அருளிச் செய்கின்றார்.

புராண வரலாறுகள்

இனி, சைவபுராணங்கள் காட்டும் பெளராணிக நெறிக் கண் நின்று அவற்றுள் இறைவனைப் பற்றிக் கூறப்படும் உருவம், செயல் முதலிய திறங்களையும் நம்பியாரூரர் ஆங்காங்கு எடுத்து நிரம்ப மொழிகின்றார், திருமுடியிற் சடையும் பிறையும் கங்கையும்,நெற்றியிற்கண்ணும், கழுத்திற் கறையும், கைகளில் மழுவும், மானும், எரியும் பிறவும் விளங்க, உமையொரு கூறினாய் , மேனியில் வெண்ணீறும், பாம்பணியும் இடையிற் புலித்தோலும் தோற்போர்வையும் உடையனாய் நிலவும் திருவுருவைப் பல பாட்டுக்களில் சொல்லோவியம் செய்து காட்டுகின்றார்.

இவ்வாறு "ஆணோடு பெண்ணும் உருவாகி"[3]' நிற்கும் இறைவன், பிரமன், திருமால், என்ற தேவர்கட்குத் தலைவன்;[4]' அவர்களது உருவத்தையும் தனது உருவில் ஒடுக்குவன்;[5]' மூவராயும் இருவராயும் முதல்வன் அவனேயாகும்.[6]' மேனியெங்கும் திருநீறணிந்து திகழ்வன்.[7]'

இனி, இப்புராணங்கள் கூறும் வரலாறுகளுள், இறைவன் உமையை மணந்தது.[8]' அவன் உமைதழுவக் குழைந்தது.[9] உமையம்மை இறைவன் கண்ணைப் புதைத்ததது[10], முருகனைப் பெற்றது,[11] காமனை எரித்தது,[12] திரிபுரம் செற்றது,[13] தேவர்கள் பொருட்டுக் கடல் நஞ்சு உண்டது,[14]


  1. 1. சுங், தே, 8 : 9.
  2. 2. சுந் தே. 35:2.
  3. 3. ௸ 3;9
  4. 4. ௸ 4:9
  5. 5. ௸ 84:7
  6. 6. ௸ 7:4
  7. 7. ௸ 82:7
  8. 8. ௸ 16:1
  9. 9. ௸ 61:10
  10. 10. ௸ 16:4
  11. 11. ௸ 16:9
  12. 12. ௸ 9:4 ; 16:9
  13. 13. ௸ 9:4 ; 16:5 ; 55:8 ; 66:5.
  14. 14. ௸ 9:10