பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாரூரர்

215

திருமால் கண்மலர் இட்டு இறைவனை வழிபட்டது,[1] இறைவன் தக்கன் வேள்வியைச் சாடியது,[2] இராவணனை மலையின் கீழ் அடர்த்தருளியது,[3] அருச்சுனற்கு வேடனாய்ச் சென்று பாசுபதம் அருளியது,[4] இந்திரன் வழிபட்டது,[5] அயிராவதம் வழிபட்டது[6] அகத்தியர் வழிபட்டது,[7] காமதேனு வழிபட்டது,[8] காளியொடு இறைவன் திருநடனம் செய்தது,[9] தாருக வனத்து முனிவர் வரலாறு,[10] இறைவன் ஆலின்கீழ் இருந்து அறம் சொன்னது,[11] கலையநல்லூரில் பிரமன் இறைவனைப் பரவியது,[12] மார்க்கண்டேயர் பொருட்டுக் காலனைக் காய்ந்தது,[13] திருப்புன்கூரில் மழைகுறித்துப் பன்னிருவேலி நிலம் பெற்றது[14] இறைவன் தில்லை மூவாயிரவர்க்கு மூர்த்தியெனப் படுவது[15] முதலிய பல செய்திகள் நம்பியாரூரரால் நன்கு குறிக்கப்படுகின்றன.

இவற்றின் வேறாக, திருத்தொண்டத் தொகையில் தனியடியார் அறுபத்து மூவர் வரலாற்றுக் குறிப்பும், தொகையடியார் ஒன்பதின்மர் குறிப்பும் குறிக்கப்படுகின்றன. அவருள் புகழ்த்துணையார்,[16] கோட்புலியார்,[17] சண்டேசுரர்,[18] ஏயர்கோன் கலிக்காமர்[19] திருநீலகண்டர்[20] கோச்செங்கணான்,[21] கண்ணப்பர்[22] முதலியோரைப் பற்றிய குறிப்புக்களும், திருஞானசம்பந்தர் ஞானம் பெற்றதும்,[23] அவர் திருத்தாளம் பெற்றதும்,[24] திருநாவுக்கரசர் திருப்-


  1. சுந். தே. 66:3.
  2. சுந். தே.16:6.
  3. ௸. 16: 7; 55:9.
  4. ௸. 53: 8; 55: 7; 66: 3.
  5. ௸. 65 :5.
  6. ௸. 63: 7.
  7. ௸. 65 :5.
  8. ௸. 65 :4.
  9. ௸. 70:4.
  10. ௸. 65 : 6.
  11. ௸. 55:7
  12. ௸. 16 :10.
  13. ௸. 62: 6; 63 :4.
  14. ௸. 55:2.
  15. ௸. 90 : 7.
  16. ௸. 9 :6.
  17. ௸. 15: 10.
  18. ௸. 16 : 3.
  19. ௸. 55 3.
  20. ௸. 58: 9.
  21. ௸. 65 : 1.
  22. ௸. 65: 2; 88: 6
  23. ௸. 97: 9.
  24. ௸. 62 ; 8.