பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

சைவ இலக்கியவரலாறு

பதிகம்பாடியதும்[1] திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருவீழி மிழலையிற் காசு பெற்றதும்[2] அடிகளால் சிறப்பித்துக் கூறப்படுகின்றன. மேலும், கோச்செங்கணான் முற்பிறவியிற் சிலந்தியாயிருந்து சோழனானதும்[3] பரசுராமன் முந்நூறு வேதியர்க்கு நிலம் பகிர்ந்தளித்ததும்,[4] தொண்டைமான் களிற்றை முல்லலக்கொடியால் கட்டியதும்[5] சுருங்கக் கூறப்படுகின்றன.

பதிகம் பாடப்பெற்ற திருப்பதிகங்கள்

நம்பியாரூரர் திருப்பதிகம் பாடிச் சிறப்பித்த திருப்பதிகள் திருவெண்ணெய்நல்லூர் முதல் திருநொடித்தான் மலையீறாக எண்பத்துநான்கு என முன்பே கூறினோம். அவையே யன்றி அவற்றின் வேறாக மிகப்பல திருப்பதிகளை நம்பியாரூரர் ஆங்காங்கு குறித்துள்ளார். அவை, அண்ணாமலை, ஆழியூர், திருவாறைமேற்றளி, இன்னம்பர், இராமேச்சுரம், ஈழநாட்டு மாதோட்டம், என்னூர், வடகஞ்சனூர், கடம்பூர், கடம்பந்துறை, கடைமுடி, கண்டியூர், கருப்பூர், கச்சிக் காமக்கோட்டம், கிழையம், கிள்ளிகுடி, கீழைவழி, கீழையில், கீழ்வேளூர், குடப்பாச்சில், குடமூக்கில், குண்டையூர், குரங்கணில் முட்டம், குற்றாலம், குறுக்கை நாட்டுக் குறுக்கை, கைம்மை, கொங்குநாட்டுப் பேரூர், கொண்டல் நாட்டுக் கொண்டல், கோத்திட்டை கோவல், கோளிலி, சிராப்பள்ளி, தக்களூர், தகட்டூர், தஞ்சை, தண்டங்கூறை, தண்டலையாலங்காடு, தண்டங்தோட்டம், தருமபுரம், தாழையூர், திருமலை, தெள்ளாறு, தென்னூர், தென்பனையூர், தேங்கூர், தேவனூர், நாங்கூர் நாட்டு நாங்கூர், நாலனூர், நெடுங்களம், நெய்த்தானம்,


  1. சுந். தே. 65 : 2
  2. ௸ 46:7; 88: 8.
  3. ௸ 66:2.
  4. ௸ 65:3. இவ்வரலாற்றுக் குறிப்புக் கேரளநாட்டுத் தோற்ற வரலாறாகப் பொய் புணர்ந்து காணப்படுகிறது.
  5. ௸ 69:10.