பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:218

 துருத்தி1" யென விதந்துகூறி வேறுபடுத்துக் காட்டுவது நாடுகளின் அமைப்பைச் செவ்வே அறிந்துரைக்கும். அவரது சொற்றிறத்தின் திட்பத்தை உணர்த்துகிறது. இனி, நாடுகளைக் குறித்ததுபோல அக்காலத்து வழங்கிய மலை ஆறு முதலியவற்றின் பெயர்களையும் நம்பியாரூரர் குறித்துள்ளார். அண்ணாமலை2 குமணமலை3 விச்சிமலை4 சீபருப்பதம்5 முதலியன சிறப்புடையன. இவற்றுள் குமணமலை யென்பது சங்கநூல்களில் முதிரமெனக்6 கூறப்படுகிறது. விச்சிமலையும் சங்க நூல்களில்7 காணப்படும் மலைகளுள் ஒன்று. இம்மலைக்குரிய விச்சிக்கோன் பக்கல் கபிலர் பாரிமகளிரை மணந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். நம்பியாரூரர், ' பருவி விச்சி மலைச் சாரல் பட்டை கொண்டு பகடாடிக் குருவியோப்பிக் கிளிகடிவார் குழன்மேன் மாலைகொண்டு ஒட்டந்து, அர வம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு'8 என்பதனால் விச்சிமலை காவிரிநாட்டு எல்லையில் நிற்கும் மலைகளுள் ஒன்றென அறியலாம். இ.து இப்போது திருச்சிராப் பள்ளி மாவட்டத்தில் பச்சைமலை என்ற பெயர்தாங்கி நிற்கிறது. சீபருப்பதம் இப்போது கர்நூல் மாவட்டத்தில் மல்லிகார்ச்சுனம் என்று கூறப்படுகிறது; அங்குள்ள கல் வெட்டுக்களும் அதனைச் 'சீபருவதம்'9 என்று குறிக்கின் றன. இவ்வண்ணம் சில மலைகளே விதந்தோதியதோடு நில்லாமல், மலைகள் பலவற்றின் முடியிலும் சிவபெருமான் கோயில் கொள்கின்றான் என்பாராய், "மலையின் தலையல்லது கோயில் கொளீர்"10 என்றும் குறிக்கின்றார். இனி ஆறுகளுள், அரிசிலாறு, காஞ்சி, காவிரி (பொன்னி), கெடிலம், கொள்ளிடம், கோதாவிரி, சிற்றாறு, நிவவு, பாலி, பெண்ணை, மண்ணியாறு, முத்தாறு, வெள்ளாறு என்ற- _____________________________

1. சுந் தே 12: 7.
2. சுந் தே. 2: 6.
3     ஷ 33 ; 9. . 
4     ஷ 62 77 ; 3.
5.    ஷ  78 : 6.
6.  புறம் 158.
7.  புறம்.200.
8.  சுந். தே. 77 : 3.
9. A. R. No. 35. of 1915.
10.  ஷ   2 : 9.