பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாரூரர்

219

இவற்றை எடுத்தோதுகின்றார். இவற்றுள் காஞ்சியாறு நொய்யலென வழங்குகிறது.[1] சிற்றாறென்பது வெஞ்சமாக் கூடலருகே வருவது இதனைக் குடவனாறு என்றும் வழங்குகின்றனர்; இ.து இப்போது அமராவதி (ஆன் பொருநை) யாற்ரறொடு கலந்து கொள்கிறது. பதிற்றுப்பத்து உரைகாரர் குறிக்கும் குடவனாவறு இதுவாயின், ஒரு காலத்தில் இது காவிரியோடு கலந்திருக்க வேண்டும். நீர் நிலைகளுள் குமரியும் ஈழநாட்டு மாதோட்ட நகர்க்கு அண்மையில் உள்ள பாலாவியும் சிறப்புடைய நீர்நிலைகளாக நம்பியாரூரரால் குறிக்கப்படுகின்றன.

இயற்கை நலம் காட்டல்

இங்ஙனம், தமிழகத்துப் பலவகை நாடுகளையும் சிறப்புடைய ஊர்கள், மலைகள், ஆறுகள் முதலியவற்றையும் காட்டி இன்புறுத்தும் நம்பியாரூரர், தாம் பாடியருளிய பாட்டுக்களில் அவ்வவ்விடங்கள் வழங்கும் இயற்கைக் காட்சிகளையும் எடுத்துக் காட்டுகின்றார். இக்காட்சிகள் தமிழ் நூல்களில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என ஐந்து வகையாக வகுத்துக் கூறப்படும். இவ்வகையே நோக்கின், சிபருப்பதம், திருக்கழுக்குன்றம் முதலிய திருப்பதிகள் குறிஞ்சி நிலத்தில் உள்ளன. அவற்றை நோக்கு வோர்க்கு அங்கே குறிஞ்சி நிலத்தின் இயற்கை நலம் இனிது தோன்றாநிற்கும். நம்பியாரூரர் இத் திருப்பதிகளைப் பாடிய பாட்டுக்களில் இக் குறிஞ்சிக் காட்சியை எடுத்தோதுகின்றார்.

சீபருப்பதம் என்பது கர் நூல் மாவட்டத்தில் மல்லிகார்ச்சுனம் என இப்போது வழங்கும் இடம் என முன்பே கூறினோம் , இங்குள்ள பழங் கல்வெட்டுக்கள் இதனைச் சீபருவதம் என வற்புறுத்துகின்றன. இது மலைகள் செறிந்த நிலப் பகுதி. நம்பியாரூரர் அருளிய திருப்பதிகத்தைக்கொண்டு


  1. இது சங்க நூல்களிற் காணப்படும் ஆறுகளுள் ஒன்று. (பதிற். 48 : 18.)